பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

19

கொள்கிறேன். அப்படி நீதி விசாரணை நடக்கிற வரையிலும் அந்தப் போலீஸ் அதிகாரியை வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அனுமதிக்க வேண்டுமென்றும் சபையின் முதல்வர் அவர்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், மனிதாபிமானத்தின் காரணமாக.

கோயம்புத்தூருக்குச்

மேலும் போலீஸ் ஐ.ஜி. சென்றிருக்கிறார்கள். மேலும் வேண்டிய நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜாயின்ட் கலெக்டர் ரிப்போர்ட் அனுப்பிய பிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதைப் பற்றி முடிவு எடுக்க முடியும். இந்த நிலைமையில் இப்பிரச்சினை அவசரப் பிரேரணைக்குரியது அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.