பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

எனினும் இப்போது கிட்டிய விவரப்படி ஆறு லட்சம் ஏக்கர் சம்பாப் பயிர் காவேரி, காவேரி மேட்டூர் திட்ட ஆயக்கட்டு இவைகளில் பயிராகியுள்ளது. சேலம், திருச்சி மாவட்டங்களில் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் ஏக்கர்களும், கீழ் கொள்ளிடம் அணைக்கட்டின் கீழ் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் ஏக்கர்களும் நடுகை முடிவுறும் நிலையில் உள்ளது. காவேரி பாசனப் பகுதிகளில் குறுவை, ஆடுதுறை 27, அறுவடையான நிலங்களில் ப்போது இரண்டாவது பயிர் நடுகை ஆகிக்கொண்டிருக்கிறது

நேற்றைய நீர்நிலை மட்டம் மேட்டூரில் 58.1 அடி. நீர்த்தேக்க அளவு 23,291 மில்லியன் கன அடி, நீர்வரத்து 1,449 க்யூசெக்ஸ், வெளியிடப்படும் பாசன நீர் 8,154 க்யூசெக்ஸ். பயிராகியுள்ள சம்பா நிலங்கள் அனைத்தினையும் கணக்கிட்டால் மொத்தத் தேவை எஞ்சிய பயிர் காலத்திற்கு மட்டுமே 43,373 மில்லியன் கன அடி. குறைந்தது நீர் வழங்கிய ஆண்டுகளின் அடிப்படையிலேயே இந்த மொத்தத் தேவை வகுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாசன நீர் வெளிவிடக்கூடிய மொத்தம் 20,000 மில்லியன் கன அடிக்குமேல் மேட்டூரில் தற்போதில்லை. இதுவரை சேர்ந்த பற்றாக்குறையை மீட்கக்கூடிய அளவு மழையும் வரத்தும் இனிமேல் எதிர்பார்ப்பது இயற்கைக்கு ஒவ்வாது என்று என்று அரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவைக்குப் பாதி அளவே மேட்டூரில் இருக்கும் கையிருப்பு நீர்த்தேக்கம். இதை வைத்து நட்டுள்ள சம்பாப் பயிரையாவது சிக்கனப்படுத்தி கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு நுண்ணிய கவனத்துடன் நீர் வழங்கி சமாளிக்கும் நிலையில் உள்ளோம்.

காவேரி சங்கமுகப் பகுதிகளில் இன்னும் ஒரு மழையாவது எதிர்பார்க்கலாம். ஓரிரண்டு நாட்களிலேயே அது பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வேண்டிய கலிப்பு தென் பகுதிகளிலே உருவாகிறது என வானிலை அறிக்கை கூறுகிறது. இது மெய்யாகி மழை பெய்திடின் ஓரளவு தற்காலிகத் தேவையையாவது இது மீட்கும். அந்த அளவுக்கு நீர்த்தேக்கத் திலிருந்து வெளிவரும் நீரைச் சேமிக்க இயலும்.

இந்நிலையில் நடுகையாகியுள்ள பயிரைக் காப்பாற்றுவதே அரசின் இலக்கு. அதற்கு மிகுந்த உறுதியுடனும், சிக்கனத்துடனும், நீர் வழங்குதலை முறையாக்கி முனைந்து செயல்படுவர். இதனால்