22
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
ஏற்படும் சிக்கல்களும் வேளாண்மைக்கு ஏற்படும் குந்தகமும் அரசுக்குத் தெரியாமல் இல்லை. அதனைத் தவிர்க்க வாண்ணாது, சிக்கல்களைச் சமாளிக்க சிக்கனத்தைக் கடைபிடிப்பதே முறை. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு பெரிதும் தேவை. எவ்விதத்தில் கணக்கிட்டாலும் இனிமேல் நடுகை மேற்கொள்வது முற்றிலும் பொருந்தாது. அதன் விளைவாக நீடித்தக்கால நீர்த்தேவையையும் நிறைவேற்ற நீர்த்தேக்கநிலை இல்லை. இது குறித்து ஏற்கனவே அரசினர் செய்திக் குறிப்பு மூலம் முன்னெச்சரிக்கையும் 17-11-1967-ஆம் நாளிலேயே விடுத்துள்ளனர்.
வரும் நாட்களிலே பருவமழைப் போக்கினையும் கிட்டும் மழை அளவினையும் கணக்கில்கொண்டு நிலவும் நிலைக்கொப்ப அவ்வப்போதுள்ள தேவைகளை சமாளிக்கும் முறையில் செயல்படுவர்.
மேலும் மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்க அரசு தயங்காது என்று உறுதி கூற விழைகின்றேன்.
எ
தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் எல்லாம் சேர்ந்து 200 ஏக்கர்களுக்குமேல் 'பாக்டிரியல் பிளைட்' என்ற நோய் நெற்பயிரினைப் பீடிக்கவில்லை என விவசாய இலாகா இயக்குநர் அரசுக்கு விவரம் தந்துள்ளார். அதற்கு டுக்கவேண்டிய பாதுகாப்பு முறைகளையும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வேண்டிய மருத்துவ முறைகளையும் மாவட்ட விவசாய அலுவலர்களுக்கு மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விவசாய அதிகாரிகள், விஸ்தரிப்பு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் பூச்சி நோயை அழிக்கவும், பரவுதலைத் தடுக்கவும், போதிய காப்பு கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விளக்கத்தையொட்டி, இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அவசியம் இல்லையென்று கருதுகிறேன்.