கலைஞரின் சட்டமன்ற உரைகள்
23
உரை : 3
தேசிய கீதத்திற்கான மரியாதை
நாள்: 11.03.1969
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: பேரவைத் தலைவரவர்களே, இன்று எழுதப்பட்டுள்ள இந்த ஒத்திவைப்புப் பிரேரணை குறித்து மாண்புமிகு கல்வியமைச்சரவர்கள் அவரே அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். தேசிய கீதம் பாடப்படுவது எப்படி இருக்க வேண்டும், எந்த நிலைகள் அங்கே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவா திப்பது என்பது தேசிய கீதத்திற்கு நாம் தருகின்ற மரியாதை ஆகாது. ஏனென்றால் அது முடிவெடுக்கப்பட்ட ஒன்றாகும் அரசாங்க நிகழ்ச்சிகள் எதுவானாலும் அல்லது அரசாங்கத் துறை யிலுள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எதுவானாலும் அந்த நிகழ்ச்சியின் இறுதியிலே தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு நாட்டில் ஒரு தவறான பிரச்சாரம், நாங்கள் தேசிய கீதத்தை மதிப்பதில்லை. தேசியக் கொடியை அவமதிக்கிறோம் என்றெல்லாம் ஒரு தவறான பிரச்சாரம் நாட்டிலே செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அந்தப் பிரச்சாரத்திற்கு அவ்வளவாக மதிப்பில்லை என்றாலும் ஆரம்பத்திலே செய்யப்பட்டது.
நான் ஒன்றை மாத்திரம் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். சென்னை மாநகராட்சி மன்றத்தை திராவிட முன்னேற்றக் கழகம் 1959-ம் ஆண்டு கைப்பற்றிய அந்த நேரம் தொட்டு அங்கே தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் திராவிட முன்னேற்றக் கழக மேயர்கள் முன்னின்று இருக்கிறார்கள். தேசிய கீதம் பாடுகின்ற அந்த நிகழ்ச்சிகளில், நாங்கள் அப்பொழுது