பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

எதிர்க்கட்சியிலே இருந்த நேரத்திலும்கூட மாநகராட்சி மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வகிக்கும் இந்த ஏறத்தாழ பத்தாண்டு காலங்களில், எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டு, நாங்களும் அதிலே கலந்துகொண்டு அதற்குரிய மரியாதையைச் செலுத்தி வந்திருக்கிறோம்.

ஆனால் இப்பொழுது மதுரையிலே அந்தக்

கல்லூரியிலே நடைபெற்ற சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரவர்கள் எந்த அளவுக்கு மனம் புண்ணடைந்து உணருகின்றார்களோ அதைப்போலவே நானும் புண்ணடைந்து அந்த உணர்ச்சியைப் பெறுகின்றேன். ஏனென்றால், மாண்புமிகு கல்வி அமைச்சரவர்கள் கூறியது போல தேசிய கீதம் பாடப்பட்ட நேரத்தில் யாரும் ஒலிபெருக்கியைப் பிடித்துத் தடுக்கவில்லை யென்றாலும், சிலர் ஒரு ஓரத்திலிருந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புவது என்பதுகூட தேசிய கீதத்திற்குக் காட்டும் மரியாதை ஆகாது. அது நம்முடைய பண்பாட்டுக்கு மரியாதை அல்ல. நம்முடைய பண்பாட்டை அழித்துக்கொள்கிறோம் என்றுகூடச் சொன்னால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். தேசிய கீதத்தைப் பொறுத்தவரையில், அது தமிழ்நாடு மக்களின் மீது தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற இந்தி மொழியால் ஆக்கப்பட்டது அல்ல. வங்கமொழியால் ஆக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், வங்க மொழிக்கும், தமிழ்மொழிக்கும், வங்கத்திலேயுள்ள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்புண்டு. அந்த வகையில் மாத்திரம் அல்ல, வேறு யாருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டின் துரதிருஷ்டவசமேயாகும் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

"சங்கே முழங்கு" என்ற பாடல் இறுதியாகப் பாடப் பட்டதுகூட, ஏதோ அந்த நேரத்திலே கல்வியமைச்சரவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலே தேசிய கீதம் பாடப்பட்ட பொழுது குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று நாட்டிற்கு அறி விப்பது நல்லது அல்ல என்ற காரணத்தினாலே, அமைதியை