பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

25

உருவாக்கும் நிலையிலே இருந்திருக்கின்றார்களேயல்லாது வேறல்ல என்பதை எதிர்க்கட்சித் தலைவரவர்களும் உணர் வார்கள் என்று கருதுகிறேன். அங்கே சங்கே முழங்கு என்ற பாடலை தேசிய கீதத்திற்குப் பிறகு போடக்கூடாது என்று அவர் தடுத்திருந்து அதன் காரணமாக அமளி ஏற்பட்டிருந்தால், அந்த அமளிபற்றிய செய்தி இந்தியாவெங்கும் பரவி, அது அகில உலகச் செய்தியாக ஆகி, ஒரு கல்லூரியில் இந்தியாவின் தேசிய கீதம் பாடப்பட்டபொழுது பெரிய அமளி ஏற்பட்டது என்று செய்தி வருமே தவிர சங்கே முழங்கு என்ற பாடலைப் பாட வேண்டுமென்று அமளி ஏற்பட்டது என்று செய்தி வராது. ஆகவே, இந்தியாவின் பெருமையைக் காப்பாற்றும் வகை யிலும், தேசிய கீதத்தின் மீது கொண்டிருக்கும் பற்றை உணர்த்தும் வகையிலும் கல்வியமைச்சரவர்கள் மிகுந்த சாதுர்யமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இனிமேல், அந்தப் பாடலை மாணவர்கள் விரும்பினால், அப்படி விரும்புகின்ற மாணவர்கள், அதை தேசிய கீதத்திற்கு முன்பு பாடிவிட்டு, கடைசியாகத் தேசிய கீதத்தைப் பாடச் செய்ய வேண்டுமென்பது முறையாகும். மேல்சபையில் மாண்புமிகு உறுப்பினர் நம்முடைய கலைஞர் திரு.டி.கே.ஷண்முகம் அவர்கள் தேசிய கீதத்திற்குப் பதிலாக வேறு ஒரு தமிழ்ப் பாடலைப் பாடுவதைப்பற்றிக் கேட்டதை நம்முடைய எதிர்க் கட்சித் தலைவரவர்கள் ஏடுகளிலே பார்த்திருப்பார்கள். நான், நிச்சயமாக அது முடியாது, இந்தியாவின் தேசிய கீதத்தைத்தான் இறுதியில் பாட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். எதிர்க் கட்சித் தலைவரவர்கள், எவ்வளவு கருத்துக்களைச் சொல்ல வேண்டுமோ அவ்வளவு கருத்துக்களையும் வெகு அழகாகச் சித்தரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் சொல்லி யிருக்கக்கூடிய பொருளை உள்ளடக்கி, எதிர்க்கட்சித் தலைவர வர்கள், குறள்போல, ஏழ்கடலைத் திணித்த குறள் என்பார்களே அதுபோல, அவ்வளவு கருத்துக்களையும் எதிர்க்கட்சி தலைவரவர்கள் வெகு அழகாகக் கூறியிருக்கிறார்கள். ஆகவே, இதைப்பற்றி விவாதித்து, தேசிய கீதம் பாடப்பட வேண்டுமா, வேண்டாமா அதை மாணவர்கள் எதிர்க்கலாமா, கூடாதா என்று