கலைஞரின் சட்டமன்ற உரைகள்
27
மொரார்ஜி தேசாய் தெரிவித்த கருத்து பற்றி
உரை : 4
ப
நாள்: 21.03.1969
கு
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே. எதிர்கட்சித் தலைவர் அவர்கள், டாக்டர் ஹண்டே அவர்கள் கொண்டுவந்திருக்கிற ஒத்திவைப்புத் தீர்மானத்தினுடைய உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் விளக்கி, இதை விவாதிக்க அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டுமென்பதை அவர் ஆதரித்தார். டாக்டர் ஹாண்டே அவர்கள் கொண்டுவந்திருக்கிற மாநிலங்களவையிலே மத்திய அரசாங்கத்தினுடைய நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான மாண்புமிகு மொரார்ஜிதேசாய் அவர்கள் வெளியிட்ட சில கருத்துக்களை ஒட்டி, அதன் காரணமாக இந்த மாநிலம் பாதிக்கப்படக்கூடும் என்ற அளவில் அந்தக் கருத்துப்படி இந்த சட்டசபையை ஒத்திவைத்து, அதைப்பற்றி விவாதிக்க வேண்டுமென்ற நிலையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்திருக்கிறார்கள். நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அதை முழுவதும் கவனிக்காத காரணத்தால் இவ்வாறு கூறி இருக்கிறார். ஏனென்றால், டாக்டர் ஹாண்டே அவர்கள் அதைக் கொண்டுவரும்போது மாண்புமிகு வினாயகம் அவர்களோடு இவர் பேசிக்கொண்டிருந்தார். ஆகவே, அதை முழுவதும் கவனிக்கவில்லை. (குறுக்கீடு) இல்லை கவனித்ததாகச் சொல் கிறார். ஹாண்டே அவர்கள் ஒரு பக்கம் நின்று, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மாநிலத்திற்கு சாதகமான அபிப்பிராயத்தை அழுத்தம் திருத்தமாக கூறியதற்கு நான் அவர்களுக்கும் அவருடைய காங்கிரஸ் கட்சிக்கும்கூட நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், மொரார்ஜி தேசாய் அவர்கள் அங்கு ரிசர்வ் பாங்கு ஓவர் டிராப்ட்களை
ஒரு