பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்கள். ரிசர்வ் பாங்கிலே ஓவர் டிராப்ட் பெறுவது என்பது எல்லா மாநிலங் களிலும் நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். 'வேஸ் அண்ட் மீன்ஸ்' வழிவகைச் செலவினைப் பொறுத்த இந்த ஓவர் டிராப்ட்டை ஒவ்வொரு மாநிலமும் பெறுவதும் அதை ஆண்டு முடிவிலே கட்டி விடுவதும் வழக்கமாக இருந்து வருகிற ஒன்றாகும். அந்த வகையிலே மத்திய சர்க்காருடைய உதவித் தொகை வந்து சேருவதற்குக் காலதாமதமானால், அப்படி கால தாமதமாகிற அந்தக் கட்டத்தில் ரிசர்வ் பாங்கியிலே ஓவர் டிராப்ட்களை வாங்கி அந்தச் செலவைச் சரிக்கட்டுவதும் அந்த உதவி வந்ததும் அதைக் கட்டுவதும் முறையாக இருந்து வருகிறது. 23 கோடி ரூபாய் என்று சொன்னார்கள். 3 கோடி ரூபாய் கொடுத்தாகிவிட்டது. 23 கோடி ரூபாயில் 12-3-1969ல் 15.39 கோடி ரூபாய்தான் இருக்கிறது.

நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் ஏதோ இவ்வளவு வரும் என்று தனக்கே தெரியாது என்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். அவர்கள் என்ன வாசகம் சொன்னார்கள் என்று அந்தத் தெளிவான வாக்கியம் எனக்குத் தெரியாத காரணத் தினால் நான் அதைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்பவில்லை. மெரார்ஜி தேசாய் அவர்கள் ரிசர்வ் பாங்கியிலே ஓவர்டிராப்ட் அனுமதிக்கப்பட முடியாது என்று கூறியது ஆச்சரியத்திற்குரிய தாக இருக்கிறது. ஏனென்றால், பழைய அரசால் இப்படிப்பட்ட ஓவர் டிராப்ட் முறைகளைப் பின்பற்றி வந்திருக்கிறது. இந்த அரசும் அப்படித்தான் பின்பற்றி வருகிறது. மற்ற மாநிலங்களும் இந்த முறையைப் பின்பற்றி வருகின்றன. அவர்கள் திடீரென்று அப்படிக் குறிப்பிட்டது உள்ளபடியே தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பார்த்து வருந்தத்தக்க ஒன்றாகும்.

டாக்டர் ஹாண்டே அவர்கள் தன்னுடைய தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல பற்றறாக்குறை பட்ஜெட் போட் டிருப்பது வேண்டும் என்று செய்யப்பட்ட காரியம் என்று மத்திய நிதி அமைச்சர் அவர்கள் வாதிப்பதும் நல்லது அல்ல. இது வேண்டும் என்று போடப்பட்ட பற்றாக்குறை பட்ஜெட் அல்ல.