பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

29

வருமானங்களைப் பெறுவதற்குக்கூட வரி விதிப்பது என்பது ஒரு முறையானாலும், அப்படி வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பழைய அரசிலிருந்து, நாம் போட வேண்டிய வரிகளைப் போட்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு தாங்கக் கூடியவர்களுக்கு வரி போட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருப்பது கழக அரசாகும். தாங்கக் கூடியவர்களுக்கு வரி போட வேண்டும். தாங்க முடியாதவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த அரசாங்கத்தினுடைய கொள்கை. அந்த வகையிலே ஏன் வரி போடவில்லை என்று கேட்டு அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தை ஒரு மாநிலத்திற்கு அளிப்பது சரியான வாதமாகாது. இப்பொழுது அவர்கள் இல்லை என்று கூறிவிட்டாலும் மீண்டும் மத்திய அரசை வற்புறுத்துவதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. அதைப் போலவே மாநில அரசுக்குக் கொடுக்கவேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த உரிமையையும், கடமையையும் எண்ணிப்பார்த்து மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று கருதுகிறோம். இப்பொழுது மத்திய அரசினுடைய நிதி அமைச்சர் அவர்கள் இல்லையென்று கைவிரித்து விட்டாலும் கூட, ஆமாம். இல்லை என்று எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிடப் போவதில்லை. தொடர்ந்து நம்முடைய தேவைகளை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். அப்படி வலியுறுத்துவதற்கு ஒரு நாள் அடையாளமாக நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஹாண்டே அவர்கள் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார் என்ற அளவிலே எடுத்துக்கொள்ளலாம். "அதில் ஒரு பகுதியை வேறு ஒரு காரணத்திற்காக ஒத்துக் கொண்டோம். அவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைத்து அதை விவாதிக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறிய கருத்து நம்முடைய கரத்தை வலுப்படுத்துகிறது என்கின்ற அளவில், இந்த நிலையிலே இதை நிறுத்தி விட்டு அவையின் நடவடிக்கைகளில் ஒத்தி வைத்து இதை விவாதத் திற்குரிய ஒன்றாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.