30
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
இந்த 23 கோடி ரூபாய் ஓவர்டிராப்ட் எதற்காக ரிசர்வ் பாங்கியிலிருந்து வாங்கினோம் என்பதற்கு உள்ள விவரத்தை யும் இங்கே படித்துவிட விரும்புகிறேன். மத்திய அரசு மாநில அரசுகள் ரிசர்வ் பாங்கிலிருந்து ஓவர் டிராப்ட்கள் வாங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரிகைகளிலே அதை ஒட்டிய செய்தியும் வந்துள்ளது. அதை ஒட்டி ரிசர்வ் பாங்கு மாநில அரசுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருக்கிறது. நாம் இப்பொழுது 23 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரசாயன உரத்தை கையிருப்பு வைத்திருக்கிறோம். சிவில் சப்ளைஸ் டிபார்ட்மெண்டில் நாம் வைத்திருக்கும் கையிருப்பின்பேரில் பாங்கில் கடன்வாங்கி சரிக்கட்டலாம். அதைப்போல ரூ.23 கோடி பெறுமானமுள்ள உரத்தின்பேரில் பாங்கில் கடன் வாங்கி இன்றைய ரூ.15 கோடி ஓவர்டிராப்ட்டை நீக்கி விடலாம் என்று நாம் அபிப்பிராயப்படுகிறோம்.
இந்த அளவில் ரிசர்வ் பாங்கில் வாங்கப்பட்டிருக்கிற ஓவர் டிராப்ட் எப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நிலைமையையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று நான் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் இந்த மாமன்றத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஒரு முறைதான் என்று இந்த மன்றத்தின் மூலமாக திரு. மொரார்ஜி தேசாய் அவர்களின் அறிவிப்பினால் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக மக்களுக்குத் தெரிவிப்பது என்னுடைய கடமை என்று கருதி, அதற்கு வழிவகை செய்கின்ற வகையில் மாத்திரம் இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் பயன்பட்டது என்ற அளவில் டாக்டர் ஹாண்டே அவர்களைப் பாராட்டி, இந்த அளவோடு இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிறுத்திவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன்.