கலைஞரின் சட்டமன்ற உரைகள்
31
உரை : 5
தேசிய கீதத்திற்கான மரியாதை
நாள்: 25.03.1969
—
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு.சித்தன் அவர்களும், திரு. கருப்பையா அவர்களும் கொடுத்திருக்கின்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது நான் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். திரு. சித்தன் அவர்கள் குறிப்பிட்டார்கள் தேசிய கீதம் என்பது ஒரு நாட்டினுடைய மானத்தை, பண்பாட்டை, ஒற்றுமையை எல்லாம் குறிப்பதாகும் என்றார். அதனை அவமதிக்கக்கூடாது என்பதிலே இந்த மன்றத்திலே இருக்கும் யாருக்கும் எந்த விதமான கருத்துவேறுபாடும் இல்லை. இதைப் பற்றி நாலைந்து நாட்களுக்கு முன் குறிப்பிடுகின்ற நேரத்தில் திரு. சித்தன் அவர்கள் குறிப்பிட்ட இதே வார்த்தைகளைச் சொல்லி தேசிய கீதத்தின் பெருமை, தேசியக் கொடியின் பெருமை இவைகள் எல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதிலே இந்த அரசு எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும், நாங்கள் அரசுப் பொறுப்பு ஏற்பதற்கு முன்னால் மாநகராட்சிப் பொறுப்பைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்ற காலத்திலேயே அங்கிருந்த மேயர்கள் எந்த அளவுக்கு இந்தப் பண்பைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருக்கிறேன் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களையும் தேசிய கீதத்தையும் இணைத்து தேசிய கீதத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் அவமதிக்கிறார்கள் என்ற தவறான பிரசாரத்தை நாட்டில் இருக்கும் சில ஏடுகள் வெகு ஒழுங்காகச் செய்து வருகின்றன. என்ன காரணத்தாலோ தேசிய கீதத்தை மாநிலத்தில் இருக்கிற அமைச்சர்கள் அவமதிக்கிறார்கள் என்று கூறுவது அமைச்சர்களைக் குற்றம் சாட்டுகிறதோ இல்லையோ, தேசிய கீதத்தை அந்தப் பத்திரிகை
ய