32
யாளர்கள்
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
இப்படிப்பட்ட
பிரசாரத்தினால்
அவமதிக்கிறார்கள் என்றுதான் கருதுகிறேன். தொழிலாளர் அமைச்சர் மாண்புமிகு திரு.ப.உ.சண்முகம் அவர்களிடம் நான் இதைப்பற்றிக் கேட்டேன். என்னிடத்தில் விளக்கிய அளவில், "அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அவசரமாக மதுரைக்குச் சென்று கூட்டத்திலே பேசி விட்டு, உடனடியாக ரயிலுக்குப் போகவேண்டிய அளவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தால் நிகழ்ச்சி முடியும்வரை இல்லாமல் கல் நாட்டிவிட்டு வந்து விட்டேன்” என்றார். அதற்குப் பின் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக் கின்றன. நாங்கள்தான் பாவிகள் என்று வைத்துக் கொண்டாலும், கவர்னர் பெருமான் கலந்து கொள்ளுகின்ற நிகழ்ச்சிகள், மத்திய அமைச்சர் கலந்து கொள்ளுகின்ற நிகழ்ச்சிகள், மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அமைச்சர்கள் கலந்து கொள்ளுகின்ற நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் எல்லாம்கூட அவர்கள், முடிவுறுகிற வரை இல்லாமல் இடையில் போகக்கூடிய அளவுக்கு வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக அவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. அவர்கள் போன பிறகு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து தேசிய கீதம் பாடப்படுவதும் உண்டு. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றவர்கள் அது முடிகிற வரையில் இருந்து தீர வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதற்கும் தேசிய கீதப் பிரச்சினைக்கும் முடி போடுவது நல்லது அல்ல
திரு. கருப்பையா அவர்கள் கொடுத்திருக்கும், ஒத்தி வைப்புத் தீர்மானம் "நவசக்தி" பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாகக் வைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒத்தி வைப்புத் தீர்மானங்களில் உள்ள வாசகத்திற்கும், "நவசக்தி" பத்திரிகை யில் வெளிவந்த செய்திக்கும் இடையே வாசகத்தில் முரண்பாடு இருக்கிறது. தேசிய கீதம் பாடும்போது தொழிலாளர் அமைச்சர் இடத்தைவிட்டு எழுந்து போய்விட்டார் என்று ஒத்தி வைப்புத் தீர்மானத்திலே இருக்கிறது. "நவசக்தி" பத்திரிகையிலே இருப்பது- "மந்திரி அடிக்கல் நாட்டி முடிந்ததும் அவசரமாகக் காரில் ஏறிச் சென்று விட்டார்; அதன்பின் நடந்த தேசிய கீத நிகழ்ச்சியில் மந்திரி கலந்து கொள்ளவில்லை." அவர்தான் போய்விட்டாரே. எப்படி அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் கலந்து