பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

33

கொள்ள முடியும்? அவர்கள் கொடுத்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு ஆதாரமாக இருந்த பத்திரிகைச் செய்தியிலே மந்திரி அவசரமாகப் போய்விட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறது. ‘அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை” என்பதற்குப் பதிலாக “கலந்து கொள்ள இயலவில்லை” என்று போட்டிருந்தால், பொறுப்பான பத்திரிகை பொறுப்பான முறை யில் செய்தியை வெளியிட்டது, அவர்களுக்கும் தேசிய கீதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஒத்துக் கொள்ள முடியும். ஆகையால் தேசிய கீதத்தை அவமதிக்கிறோம், அவமித்கிறோம் என்று கூறி ஒரு தவறான பண்பாட்டை தமிழக அரசுக்கு உண் டாக்குகிறோம் என்று கருதிக் கொண்டு அப்படிப்பட்டதொரு நிலையை தமிழ் நாட்டுக்கு ஏற்படுத்த வேண்டாம் என்று மிகுந்த அக்கறையோடு மாண்புமிகு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த தமிழக ஆட்சியின் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்ற அளவில் இப்படிப்பட்ட காரியங்களில் என் அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சரும் நிச்சயமாக தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டுமென்ற அளவில் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. இனி ஒரு நிகழ்ச்சி இப்படி நடைபெற்று விட்டால் அது சரியா இல்லையா என்பதை தயவு செய்து உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதிக் கேட்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் நல்லது. சட்ட மன்றத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டு வரும்போது, அது பத்திரிகைகளில் வருகிற காரணத்தினால் இந்தியாவில் ஒரு பகுதியில் தேசிய கீதம் இன்று அவமதிக்கப்படுகிறது என்ற செய்தி பகைவர் நாடுகளுக்கு தித்திப்பான செய்தியாக இருக்கும் என்ற காரணத் தினால் இப்படிப்பட்ட முயற்சிகளில் இனிமேல் நண்பர்கள் ஈடு படாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அவையை ஒத்திவைத்து இதை விவாதிக்கத் தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்துக்கொண்டு அமர்கிறேன்