பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

உரை : 6

மாநில சுயாட்சி

நாள் : 19.8.1969

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே, தமிழரசுக் கழகத் தலைவர் மாண்புமிகு ம.பொ.சி. அவர்கள் நாளையதினம் நடத்த இருக்கின்ற மாநில சுயாட்சிப் போராட்டம் குறித்து மாண்புகு உறுப்பினர்கள் திரு. சீமைச்சாமி அவர்களும். திரு.ஆ.கு. சுப்பையா அவர்களும் கொடுத்துள்ள இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால், இன்றைய தினம் ஆளும் கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து அதிக அதிகாரங்களைப் பெற்று சுயாட்சித் தன்மையோடு விளங்கிட வேண்டுமென்ற கொள்கையை மிகவும் அக்கறையோடும், தீவிரமாகவும் எடுத்துச் சொல்லி வருகிற கட்சியாகும். இந்தக் கட்சியினுடைய தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுய ஆட்சியை வலியுறுத்தி அவர்கள் மறைவதற்கு முன்னால்கூட ஒரு பெரும் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள் என்பதையும் நாடு அறியும். எல்லாக் கட்சி நண்பர்களும் நன்றாக அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதில் உள்ள அக்கறையின் காரணமாக முதலமைச்சர் என்ற முறையில் நான் டில்லிக்குச் சென்றிருந்த நேரத்திலும், வேறு பல அறிவுப்புகளிலும் 'மாநிலங்களவை அதிக அதிகாரங்களைப் பெற வேண்டும், ஆனால் அப்படிப் பெற வேண்டுமென்று கருதுகிற அதிகாரங்கள் எவை எவை என்று நாம் கூறும்போது, மொத்தத்தில் மூன்று அல்லது நான்கு அதிகாரங்கள் போக மிச்சம் உள்ள எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு என்று கூறுவதைவிட, திட்டவட்டமாக வரையறுத்து இன்ன இன்ன