பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

அறிக்கை வந்த பிறகு என்னென்ன அவர்களுடைய அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதிலே திட்டவட்டமான முடிவுக்கு வந்து எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கூடி முடிவு செய்யலாம். நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சீமைச்சாமி அவர்களும், மாண்புமிகு சுப்பையா அவர்களும் எடுத்துக்காட்டியது போல் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. வேறு மாநிலங்களிலே உள்ள காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் மாத்திரமல்ல, காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள்கூட இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதிலே அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதற்கு இந்தியா முழுமையும் உள்ள மாநிலங்களில் இருந்து நல்லாதரவு கிடைக்கும்.

ஆகவே, இந்த அதிகாரங்களை வரையறுத்துக் கொண்டு நல்ல முறையில் பிரச்சாரம் செய்து, மற்ற மாநிலங்களுடைய நல்லாதரவையும் பெற்று மத்திய சர்க்காரோடு வாதாட வேண்டும். வாதாடிப் பயன் இல்லை என்றால் போராட வேண்டும். அப்படிப் போராடுகின்ற நேரத்தில் எல்லாக் கட்சிகளும் இணைந்து நின்று அந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டுமென்றுதான் தமிழரசுக் கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அவர்களும் முதலில் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் என்னுடைய வேண்டுகோளுக்குப் பிறகு அதை ஒரு நாள் அடையாளப் போராட்டமாக மட்டும் நடத்துவதற்கு முன்வந்தார்கள். ஆனால், இன்று காலைப் பத்திரிகைகளில் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப் பதாகச் செய்தி வந்திருக்கிறது. நான் அதைப் பற்றி ம.பொ.சி. அவர்களிடம் கேட்ட நேரத்தில், பத்திரிகைகளில் செய்தி தவறாக வந்திருப்பதாகவும், ஒரு நாள் அடையாளமாக மட்டுந்தான் அந்தப் போராட்டம் நடைபெறுவ தாகவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்போதுகூட நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்- நான் அன்று கேட்டுக்