பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

37

கொண்டதைப் போல் இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.

மூவர் குழு முடிவுக்குப் பிறகு அனைவரும் இணைந்து, நம்முடைய மாநிலம் மாத்திரமல்லாது எல்லா மாநிலங்களும் இணைந்து நின்று வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற தகுந்த யோசனைகளைச் செய்து அதிலே ஈடுபடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் இப்போது தேவையில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.