38
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
உரை : 7
மின் கட்டண உயர்வு
நாள் : 20.03.1970
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, கோவை மாவட்டத்தில் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல் விவசாயிகள் ஏதோ கூட்டம் போட்டு அதன் மூலமாக மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து தங்களுடைய நிலையை விளக்கி மாவட்ட ஆட்சித் தலைவருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ மனுக் கொடுப்பது என்ற அளவில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்கள் மூன்று கட்டங்களை முன்கூட்டியே அறிவித்திருக்கிறார்கள். முதல் கட்டந்தான் அவர்கள் கூட்டம் போட்டதும் அடையாளமாக ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததும். இரண்டாவது கட்டம் மாநில அரசின் அலுவலகங்கள், கலெக்டர் ஆபீஸ் போன்றவற்றின்முன் மறியல் நடத்துவது என்று துண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மூன்றாவது கட்டமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாமல் வரிகொடா இயக்கம் நடத்துவது என்று தீர்மானித்து பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்த மூன்று கட்டங்களும் எந்த நிலைக்குக் கொண்டுபோய் விடும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உணருவார்கள். ஆனாலும் இதிலே என்ன வன்முறை வந்துவிடும் என்று கேட்டார்கள்.
இதிலே கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் குறிப்பிட்ட சில எம். எல். ஏ.-க்களைத் தவிர, சில முற்போக்குக் கட்சிக்காரர்களைத் தவிர பெரும்பாலான மற்றவர்கள் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்பட்டவர்களா என்று பார்க்கும்