பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

ஓர்

1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றது தி. மு. கழகத்தின் மாநில மாநாடு. தி. மு. கழகம் 1949ல் தொடங்கப் பட்டு ஏழாண்டுகள் ஆகியிருந்தன. அப்போதெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தி. மு. க. குறித்துப் பேசினாலும், எழுதினாலும், பேட்டி கொடுத்தாலும் அறைகூவல் விடத் தவற மாட்டார். “தி. மு. க. காரர்கள் வெட்ட வெளியில் நின்று பேசுகிறார்களே; அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பது உண்மையானால் சட்டசபைக்கு வந்து பார்க்கட்டுமே !" என்பதுதான் அந்த அறைகூவல் - அவரது அந்த அறைகூவலை அன்பான அழைப்பாகவே கருதி, அறிஞர் அண்ணா அவர்கள், "இனிமேல் வரும் தேர்தல்களில் தி. மு. க. போட்டியிடும்” என்று ஒரு தீர்மானத்தை, திருச்சி மாநில மாநாட்டில் கூடியிருந்த லட்சோபலட்சம் மக்களின் தீர்ப்பாகவே வெளியிட்டார்.

-

அதன் விளைவாகக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் இடங்களை அண்ணா அவர்களே; கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிவித்தார். அப்போது நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க; நான் எனது பிறந்த ஊரான “திருக்குவளை” உள்ளிட்ட நாகைத் தொகுதியில் நிற்கலாமென்று முடிவு செய்துகொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் அண்ணா அவர்கள், அன்றைய தலைமைக் கழகமிருந்த ராயபுரம் அறிவகத்தில் இருந்தார்கள். சந்தித்தேன். அண்ணா கையாலேயே என் பெயரை "குளித்தலை தொகுதி”யில் குறிப்பிட்டு; என்னைக் கேட்காமலேயே அறிவித்துவிட்டார். மறுத்துரைக்காமல் குளித்தலையில் வேட்பாளராக நின்றேன். அந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொடங்கி, நாகை வரையில் இருந்த அனைத்துத் தொகுதிகளிலும் நான் ஒருவன் மட்டுமே குளித்தலையில் வென்றேன். ஆம்; சட்டப்பேரவை நுழைவுக்கான கதவு இப்படி எனக்குத் திறக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில், நான், பேராசிரியர் க. அன்பழகனார்,