கலைஞரின் சட்டமன்ற உரைகள்
39
போது மன்றாடியார், சமத்தூர் ஜமீன்தார், வேட்டைக்காரன்புதூர் ஜமீன்தார், பாளை ஜமீன்தார் ஆகிய இவர்கள்தான் பாவம், இந்த ஏழைகள் இந்த மின் கட்டண உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக உள்ளபடியே நான் வருந்துகிறேன். (ஆரவாரம்.) கம்யூனிஸ்ட் கட்சி அங்கே இணைய வில்லை. பி. எஸ். பி.யும் மற்ற சில முற்போக்குக் கட்சிகளும் அங்கே இணைந்திருக்கின்றன என்றாலும் இதிலே மற்றவர்களும் கலந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் உச்சவரம்புச் சட்டம். இதை முதல் ஆரம்பமாக வைத்துக்கொண்டு உச்சவரம்புச் சட்டத்தை எதிர்ப்பதற்கான முயற்சியைத் தூண்டி விவசாயிகளுடைய படையைத் தயாரிப்பது என்று திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அந்தக் காரணத்தாலேதான் மன்றாடியார் அவர்களுடைய இல்லத்திலே மிராசுதாரர்கள் கூட்டம் நடைபெற்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரிடத்தில் இதை எடுத்துச் சொல்ல அந்தக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்னும்கூட உச்ச வரம்பின் அளவைக் குறைக்க வேண்டுமென்று கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஆத்திரப்பட,
இப்படிப்பட்ட நிலைமைகள் எல்லாம் அங்கே உருவாகியிருக்கின்றன என்ற செய்தி கோவை மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவருடைய புன்னகைக்குப் பொருள் எனக்கு நன்றாகப் புரிகிறது. இதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் சிலபேர் அந்தக் காரியத்தில் ஈடுபட்டார்கள். கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் என்ற பெயரிலேதான் அவர்கள் இந்த நோட்டீஸைப் போட்டிருக்கிறார்கள். மாவட்ட தாலுகா அலுவலகங்களுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடத்துவது என்பதாக நோட்டீஸ் போடப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல. லாரிகளிலும், கார்களிலும் கொண்டு போய் விவசாயப் பெருங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் எந்த எந்த இடங்களை குறிப்பிட்டார்களோ அந்த இடங்களில் குவிக்கவும் தொடங்கினார்கள். இதில் வன்முறை ஏற்படும் என்று அரசு கருதியதா என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கேட்கிறார்கள். இதில் வன்முறை ஏற்படக்கூடும் என்பதற்கு ஒரு