பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

சிறிய உதாரணம் தர விரும்புகிறேன். பல்லடத்திலிருந்து 30 பேர்களைக் கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும்போது அப்படி வந்த போலீசாரை, 300 பேர்கள் வளைத்துக் கொண்டு எங்களையும் வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போங்கள், இல்லாவிட்டால் அவர்களை விட்டுவிட்டுப் போங்கள் என்று அவர்களைக் கைது செய்த சில மணி நேரத்திற்குள் இப்படிப்பட்ட அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், காவல்துறையினரும் மிகச் சாதுர்யமாகச் சமாளித்து, மிகவும் அமைதியான முறையில் நடந்துகொண்டு இன்னும் ஒரு பத்துப் பேர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் அளவிற்கு அதற்குக்கூட இடம் அளித்து அந்த அளவிற்கு வளைந்து கொடுத்து அந்த நிலையைச் சமாளித்திருக்கிறார்கள். ஆகவே வன்முறை எந்த நேரத்திலும் தோன்றக்கூடும் என்பதற்கான அடையாளங்கள், அறிகுறிகள் ஏற்பட்டதன் காரணத்தினால்தான் 144 தடை உத்தரவு அங்கு போடப்பட்டது. 144 தடை உத்தரவின் மூலம் விவசாயிகளை எல்லாம் அடக்கி ஒடுக்கி மிரட்டவேண்டும் அல்லது அவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டுமென்ற நிலையில் இந்த அரசோ அல்லது அங்கிருக்கிற காவல் துறையினரோ அல்லது மாவட்ட அதிகாரிகளோ எண்ணி யிருப்பார்களேயானால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதை இந்த மன்றத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 10,000, 13,000, 5,000 என்றெல்லாம் அறிக்கைகள் வந்தன. கோவையில் 39 பேர்கள் கைதானார்கள். அவினாசியில் 20 பேர்கள் கைதானார்கள். திருப்பூரில் 32 பேர்கள் கைதானார்கள். பெருந்துறையில் 25 பேர்கள் கைதானார்கள். தாராபுரத்தில் 31 பேர்கள் கைதானார்கள். பொள்ளாச்சியில் 41 பேர்கள் கைதானார்கள். காங்கேயத்தில் 71 பேர்கள் கைதானார்கள். மொத்தத்தில் 265 பேர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் வைக்கப்பட்டார்கள். 19-3-1970 மாலை ஆறரை மணிக்கு அந்த 265 பேர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமாக வைத்து எழுப்பப்பட்டிருக்கிற பிரச்சினை, விவசாயிகள் சங்கத்தின் பிரச்சினை, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் கூறியதுபோல் மின்சாரக்