பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

41

பைசா

கட்டணத்தைப் பொறுத்ததாகும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு விளக்கத்தை இந்த மன்றத்திற்கு அளிப்பது என் கடமை என்று நான் கருதுகிறேன். மின்சாரக் கட்டணம் 81/4 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தப்பட்டிருக் கிறது. ஆனால் நமக்கு ஒரு யூனிட்டுக்கு ஆகும் உற்பத்திச் செலவு 16 பைசாவாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த 16 பைசா உற்பத்திச் செலவில் இதுவரையில் 814 பைசா என்ற அளவில் யூனிட் சார்ஜ் வசூலித்தபோது நமக்குக் கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு இருந்தது. அதை ஸப்ஸிடியாக, மானியமாகக் கொடுத்து வந்திருக்கிறோம். இப்போது பத்து பைசா என்றாக்கிவிட்டாலும் ஆறு பைசா அளவிற்கு இப்போதும் இந்த அரசு மானியமாக ஆறு கோடி ரூபாய் தருகிறது என்றால் அது விவசாயிகளின் நன்மைக்காகத் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் 12 பைசா என்றிருக்கிறது. அஸ்ஸாமில் 14 பைசா என்றிருக்கிறது. பீஹாரில் 15 பைசா என்றிருக்கிறது. குஜராத்தில் 14 பைசா பைசா என்றிருக்கிறது. ஹரியானாவில் 16.22 பைசா என்றிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் 11.5 என்றிருக்கிறது. மராட்டியத்தில் 13.87 பைசா என்றிருக்கிறது. ஒரிஸாவில் 12 பைசா என்றிருக்கிறது. இராஜஸ்தானில் 14.3 பைசா என்றிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 15 பைசா என்றிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 12 பைசா என்றிருக்கிறது. மைசூரில் 10 பைசா என்றிருக்கிறது. கேரளத்தில் 8 பைசா என்றிருக்கிறது. கேரளத்தில் எட்டு பைசா என்றிருப்பதற்குக் காரணம், கேரளம், மைசூர் ஆகிய மாநிலங்களில் குறைந்த பரப்பளவிற்கு குறைந்த தூரத்திற்குத்தான் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுவதால் விலை குறைவாக இருக்கிறது. மேலும் அங்கே நீர் மின் நிலையங் களிலிருந்து மட்டும்தான் உற்பத்தி செய்யப்படுவதாலும், மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் மின்சாரம் கொடுக்கக்கூடிய நிலைமை இருப்பதினாலும் யூனிட்டின் விலை அங்கு குறைவாக இருக்கிறது. நமக்கும் அவர்கள் மின்சாரம் விற்றுக்கொண்டிருக் கிறார்கள். மைசூரிலிருந்தும் கேரளாவிலிருந்தும் நாம் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கி பிறகு அந்த மின்சாரம் செல்வதற்கான பரந்த அளவிற்கான போக்குவரத்துச் செலவு எல்லாம் மேற்கொண்டு அதற்காகிற செலவு, விவசாயிகளைப்போய்