42
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
எட்டிப்பிடிப்பதற்கான செலவு ஆகிய எல்லாம் சேர்ந்து 16 பைசா என்றளவிற்கு வருகிறது. ஆக 81/4 பைசா என்றிருந்ததை பத்து பைசா என்று ஆக்கியிருக்கிறோம். இதில்கூட இப்போதும் நாம் ஆறு பைசா அளவில் சப்ஸிடி கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதில் நமக்கு ஆறு கோடி ரூபாய் என்ற அளவில் இழப்பு ஏற்படுகிறது.
திரு. பூவராகன் அவர்கள் சொன்னார்கள், இங்குமட்டு மல்ல மற்ற மாவட்டங்களிலும் இதற்கான கிளர்ச்சிகள் தொடங்கப் பட இருக்கின்றன என்று குறிப்பிட்டார்கள். அவர்களுடைய புதுக் கட்சியை வலுப்படுத்துவதற்கு அந்தக் கிளர்ச்சிகள் பயன்படுமானால் அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால் உண்மை நிலையை உணர வேண்டும். இதைப் பற்றித் தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் இந்த மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்ற அளவில்கூட தலையங்கங்கள் எழுதியிருக்கின்றன. ஆகவே இதில் விவசாயிகள் யாரும் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. சர்க்கார் இன்னும் ஆறு கோடி ரூபாய் இழப்பில்தான் விவசாயிகளுக்கான நல்ல காரியங்களைச் செய்துகொண்டு வருகிறது. கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். இது ஒன்றே விவசாயிகளிடத்திலும் கைது செய்யப்பட்டவர் களிடத்திலும் இந்த அரசுக்குள்ள அனுதாபத்தைக் காட்டும். இந்த விஷயத்தில் மட்டுமல்ல தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிகளிலும் அரசு, நமது சபாநாயகர் அவர்கள் ஒரு நேரத்தில் சுட்டிக் காட்டியதைப்போல், திருவள்ளுவர் அவர்கள் கூறியிருப்பது
போல்
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்”
என்ற நிலையை அரசு மேற்கொண்டிருக்கிறது. நேற்றோடு இந்தக் கிளர்ச்சியும் நடைபெறவில்லை, இன்று அதாவது 20-ம் தேதி யாரும் கைது செய்யப்படவில்லை. ஆகவே இதற்காக அவையை ஒத்திவைத்து விவாதிக்கவேண்டிய அவசியமில்லை என்ற என் கருத்தினைக் கூறி அமைகிறேன்.