கலைஞரின் சட்டமன்ற உரைகள்
43
தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசிய
உரை : 8
கருதது
நாள் : 24.03.1970
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் மார்டின் அவர்கள் அவசர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை இங்கு அளித்து அவையின் மற்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் நானும், நிதியமைச்சர் அவர்களும் கலந்துகொண்டு அளித்துள்ள கருத்துக்கள் விரிவாகப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. தமிழ் நாட்டினுடைய தேவைகளை ஒவ்வொரு தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் நாங்கள் வலியுறுத்தத் தவறுவது இல்லை என்பதையும், வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையும், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டங்கள் கூடுகிற நேரங்களில் மாத்திரம் அல்லாமல் வேறு நேரங்களிலும் பொறுப்பு வாய்ந்த மத்திய அமைச்சர்களை நேரிலே சந்தித்து வலியுறுத்திக் கேட்டும், கடிதங்கள் மூலமாக வலியுறுத்திக் கேட்டும் தமிழ் நாட்டின் தேவைகளை உணர்த்திக்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இப்போது 21, 22 ஆகிய நாட்களில் நடை பெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பிரதமர் அவர்கள் பேசி முடித்த பிறகு விவாதத்தைத் தொடங்கி வைத்தவன் என்ற முறையில் தமிழ்நாட்டினுடைய தேவைகளை நான் குறிப்பிட்டுக் காட்டினேன். தமிழ்நாட்டின் தேவைகள் எவையெவை, என்னென்ன குறிப்பிட்டுக் காட்டப்பட்டன என்பவைகள் எல்லாம் விளக்கமாக இங்கே இருக்கின்ற உறுப்பினர்கள் அறியத்தக்க வண்ணம் ஏடுகளிலே வந்திருக்கின்றன. பல ஆண்டு காலமாக நாம் இந்த அவையிலும், மத்திய அமைச்சர்களிடத்திலும்