பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

எடுத்துச்சொல்லி வருகிற அந்தக் கோரிக்கைகளைத்தான் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறோம்.

அங்கே நான் என்னுடைய உரையை இறுதியாக முடிக்கிற நேரத்திலே, “சேலம் இரும்பாலையைப் பற்றி இதுவரையில் நீங்கள் பலமுறை வரும், வரும் என்கிற அறிவிப்பைத் தந்தாலும், இந்த வளர்ச்சிக்குழு கூடியிருக்கின்ற இந்தக் கட்டத்திலேகூட அது பற்றி இறுதியான அறிவிப்பைத் தரவில்லை. ஆகவே, அந்த அறிவிப்புத் தேவை” என்பதைச் சுட்டிக்காட்டினேன். 175 கோடி ரூபாய் கூடுதல் தொகையாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மார்டின் அவர்கள் கேட்டார்கள் 'அதிலே எவ்வளவு தொகை நமக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்? என்று. 'நீங்கள் எவ்வளவு கேட்டீர்கள்?' என்றும் கேட்டார்கள். 175 கோடி ரூபாய் கூடுதல் தொகையை ஒன்பது மாநிலங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய மாநிலம் அதிலே அறவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒதுக்கினால்தானே, இவ்வளவு ஒதுக்கினார்கள், இவ்வளவு அதிகத் தொகை தேவை என்று சொல்ல முடியும். ஆகவே, அடிப்படைக் குறைகளை ஆராய்ந்து இந்த மாநிலத்திற்கு இவ்வளவு ஒதுக்க வேண்டுமென்று கேட்பதைவிட, 175 கோடி ரூபாயில் எதுவும் இல்லையென்று புறக்கணிக்கப் பட்டிருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி ஏதாவது ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால், அதற்குப் பிறகு இவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டுமென்ற வாதத்தில் இறங்குவது பொருத்தமுடையதாக இருக்கும்.

வறட்சிப் பணிகள் என்ற பெயரால் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இந்த ஆண்டு 25 கோடி ரூபாயும், வருகிற நான்கு ஆண்டுகளுக்கு 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதிலே எவ்வளவு ஒதுக்கப்பட்டது. நீங்கள் கேட்டது எவ்வளவு என்று. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டார்கள், அதிலும் அவர்கள் நம்முடைய தமிழ் மாநிலத்திற்கு, தமிழ்நாட்டிற்கு எதுவும் ஒதுக்கவில்லை. ஆகவேதான் கடைசி நிபந்தனைகளாக வைத்தோம் - சேலம் இரும்புத் தொழிற்சாலைக்கான அறிவிப்புத் தேவை; 175 கோடி ரூபாயில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது, நிவாரணம் தேவை; 100 கோடி ரூபாயிலும், வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்திலும் தமிழகம் ஏமாற்றப்பட்டிருக்கிறது;