பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

ஆகவேதான் சேலம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதை அழுத்தந்திருத்தமாகக் கேட்டிருக்கிறோம். அவை தமிழர்களின் உணர்ச்சியைப் பிரதிபலிக்க எடுத்துச்சொல்லப்பட்ட வார்த்தைகள் ஆகும். இந்த உணர்ச்சிக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். மதிப்பளித்து ஆவன செய்ய வேண்டும்; செய்வதற்கு முன்வருவார்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை வீண்போகாது என்று கருதுகிறேன். அந்த நம்பிக்கை நாசமாகுமானால் இந்தச் சட்டமன்றத்தில் இருக்கும் எல்லாக் கட்சிக்காரர்களும் ஒன்று சேர்ந்து அதற்குப் பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த விஷயத்தை இந்த அளவுக்கு நிறுத்திக்கொள்ளுவது நல்லது என்ற அளவில் திரு. மார்ட்டின் அவர்கள் கொண்டுவந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் தேவையில்லை என்ற கருத்தைக் கூறி அமைகிறேன்.