பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

உரை : 9

9

நிலப்பறி இயக்கம்

47

நாள் : 25.08.1970

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இங்கு தரப்பட்டுள்ள ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது பலர் தங்களுடைய பெயர்களைத் தந்திருந்தாலும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் அதைப்பற்றி நிறையப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஒத்திவைக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு கிட்டத்தட்ட ஒத்திவைத்து விவாதிக்கின்ற நேரத்தை எடுத்துக்கொள்வது ஒரு தந்திரம். ஆனால் இந்த மன்றத்தில் நாம் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மரபும் ஆகி வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் நமது திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் நீண்ட நேரம் பேசுவார்கள் என்று பார்த்தேன். அரசாங்கத்தின் கொள்கை என்ன என்று கேட்டதோடு முடித்துக்கொண்டு விட்டார்கள்.

அதைப்போலவே நண்பர் திரு. சங்கரய்யா அவர்களும் எப்படிக் கைது செய்யலாம் என்ற கேள்வியைக் கேட்டதோடு தங்கள் உரையை முடித்துவிட்டார்கள். கோவில்பட்டி நண்பர் திரு. அழகர்சாமி அவர்களும் இது உப்பு சத்தியாக்கிரகத்தைப் போன்றது என்று குறிப்பிட்டார்கள். நாம் உப்பு சத்தியாக்கிரகம் எதற்காக நடத்தப்பட்டது என்பதையும், இந்த உப்பு சத்தியாக் கிரகம் எதற்காக நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்கத் தவறிவிடக்கூடாது.

இந்த அரசாங்கத்தின் கொள்கை என்ன என்று கேட்ட திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அரசாங்கத்தின் கொள்கை, சட்டப்படி காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதுதான். நிலங்கள்