4
ஏ.
ஏ. வி. பி. ஆசைத்தம்பி, திருமதி சத்தியவாணிமுத்து, ஏ கோவிந்தசாமி, ப. உ. சண்முகம், விருதாசலம் எம். செல்வராஜ், எம். பி சுப்பிரமணியம், ம. பா. சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன், பி. எஸ். சந்தானம், சி. நடராஜன் ஆகிய நாங்கள் 15 பேர் வெற்றிபெற்று, சட்டப்பேரவையில் இடம்பெற்றோம்.
அன்று முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் எனக்கு; ஆம் கழகத்துக்கு; நான் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றியைத்தான் அளித்தார்கள்.
நான்
இந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் சட்டப்பேரவையில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆற்றிய உரைகளை அவற்றின் அகல நீளம் கணக்கிடாமல் அப்படியே அச்சியற்றித் தருகிற அரிய பணிக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட தம்பி சண்முகநாதனை என்னால் மறக்கவே முடியாது. அவரது முயற்சிதான் அடுக்கடுக்கான இந்தத் தொகுப்புகள் என்பேன்.
-
1938 முதல் 70 ஆண்டுக்கால என் பொது வாழ்க்கையில் - அரசியல் வாழ்வில் ஓர் அங்கமான சட்டப்பேரவையில் தொடர்ந்து 50 ஆண்டுக் காலம் நான் ஆற்றிய பணிகளை, அந்த அவையில் ஆற்றிய இந்த உரைகள் விளக்கிடும் என்பதில் ஐயமில்லை.
-
சொல்லாடலில் சூடும், சுவையும் மாறி மாறி காணலாம் அதன் காரணமாக மனித நேயம் - நாகரிகம் - பண்பாடு இவற்றை அணுப்பொழுதும் மறந்ததுமில்லை; அரசியல் பகை காரணமாக அறவே துறந்ததுமில்லை.
அவற்றில் சிலவற்றுக்குச் சான்று கூற விழைகிறேன். நான் பிறந்த ஊர் திருக்குவளையில் என் அன்னையின் பெயரால் “அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி”யை முதலமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம்தான் திறந்துவைத்தார். என் அன்னை அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எனக்கு முன்பு சென்று