பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

49

பொதுக்கூட்டங்கள் நடத்தியும், 'நிலப் போராட்ட நாளை'க் கடைப் பிடித்தல்.

(ஆ) 9-8-70 பொறுக்கியெடுக்கப்பட்ட சில இடங்களி லிருந்து கட்சித் தலைவர்கள் தலைமையில், நிலத்தை வசப்படுத்து மிடங்கள் நோக்கி கட்சித் தொண்டர்கள் 'பாதயாத்திரை செல்லல். 9-8-70 முதல் 14-8-70 வரையில் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், உண்டியல் பணம் வசூல் செய்தல், ஊர்வலம் நடத்துதல்.

(இ) 15-8-70-தொண்டர்கள் தங்கள் தலைவர்களின் தலைமையில் தேர்ந்தெடுத்த நிலங்களில் நுழைந்து சாகுபடி செய்யத் தொடங்குவர் அல்லது அந்த நிலத்தைச் சாகுபடி செய்யத் தக்கதாகச் செய்வர். அவர்கள் கைதுசெய்யப்பட்டால், இப்பணியைத் தொண்டர்கள் தொகுதி தொகுதியாகத் தொடர்ந்து நிறைவேற்றுவர்.

திட்டமிட்ட நிலப்பறிக் கிளர்ச்சிக்கு ஆதரவு தேடுவதற்கு 'நிலப் போராட்ட நாள்' கொண்டாட இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக் கிளைகள், 1-7-70-ம் நாள் தமிழ் நாட்டின் சில இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தின. பல இடங்களில் குறிப்பிடப்பட்ட தலைவர்களின் தலைமையில் 15-8-1970-ல் இக்கிளர்ச்சியை நடத்த இக்கட்சி முடிவு செய்தது.

88

தஞ்சாவூரில் 1970 ஜூலை 3-ம், 4-ம் தேதிகளில் நடைபெற்ற பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இக்கிளர்ச்சியில் பங்குகொள்ள 10,000 தொண்டர்களை இம்மாநிலம் முழுவதிலும் சேர்ந்து, கிளர்ச்சியின் போது தடை உத்தரவுகளை மீறவும் இக்கட்சி முடிவெடுத்தது. தமிழ்நாட்டில் சுமார் 10,000 தொண்டர்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொள்ள முன்வந்துள்ளனர் என்றும், முதல் நாளில் இந்த இயக்கத்தை இக்கட்சியின் முதன்மைத் தலைவர்கள் தலைமை தாங்கி நடத்துவது என்றும், தடுப்பு நடவடிக்கையாகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் மற்றவர்கள் தலைமறைவாகி இக்கிளர்ச்சியைக் அமைத்து வெற்றிகரமாக நடத்துவர் என்றும். தெரிய வந்தது. நிலக்கிழார்கள் தடுத்துத் தாக்கும் செயலில் இறங்கினால் கட்சித்தொண்டர்கள் திருப்பித் தாக்கி நிலத்தை வலுவில் கைப்பற்ற முயல்வர் என்றும், மார்க்ஸிஸ்ட் பொதுவுடைமையாளரும் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியினரும் இந்த இயக்கத்தில் குறிப்பாக கிராமப்பகுதிகளில் சேர்ந்து

3-க.ச.உ.(ஒ.க.)