பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

ஒத்துழைப்பர் என்றும் பொதுவுடைமைக்கட்சி நம்புவதாகவும் அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆயினும், இந்தக் குறிப்பிட்ட கட்சியினர் இந்த இயக்கத்தை ஒத்துக்கொள்வது இல்லை என்ற முடிவினை அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் இங்கு நான் குறிப்பிட்டதைப் போல “நிலக்கிழார்கள் தடுத்துத் தாக்கும் செயலில் இறங்கினால் கட்சித் தொண்டர்கள் திருப்பித் தாக்கி நிலத்தை வலுவில் கைப்பற்ற முயல்வர்" என்பதாகத் தீர்மானித்திருக்கிறார்கள். இது அவர்களது பத்திரிகையில் எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. "பிரதமர் நிலத்தில் நிலப்பறி இயக்கம் நிகழ்ந்த நேரத்தில் அந்த இடத்தில் கிளர்ச்சி செய்ய வந்த நேரத்தில்தானே கைது செய்யப்பட்டார்கள், இங்கே முன்கூட்டியே கைது

செய்துவிட்டார்களே இது என்ன நியாயம்?” என்றார்கள்.

நான் முன்பே குறிப்பிட்டபடி நிலப்பறி இயக்கத்தை நடக்கவிட்டு, நிலக்கிழார்கள் தடுத்துக் தாக்கும் செயலில் இறங்கினால் கட்சித் தொண்டர்கள் திருப்பித் தாக்கி நிலத்தைக் கைப்பற்ற முயல்கிறபோது அந்த இடத்தில் ரத்த ஆறு ஓடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க மறந்துவிடக்கூடாது. சொத்துக்கு உரியவர்கள் தங்களுடைய சொத்து பறிக்கப்படுகிற நிலைமையில் யாராவது அங்கு ஆக்கிரமிப்பார்களானால் அதைத் தடுத்து நிறுத்த பலாத்காரத்தை உபயோகிக்கக்கூட சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதை வழக்கறிஞர் பெருமக்கள் நன்கு உணர்வார்கள். சட்டப்படியான அந்த உரிமையைப் பயன்படுத்தினால் என்ன நடைபெறும்? ஒவ்வொரு கழனியிலும், வயல் வெளியிலும் என்ன நடைபெற்றிருக்கக்கூடும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஆகவேதான் பொதுவுடைமைக் கட்சியின் முடிவு அரசுக்குத் தெரிந்ததும் இதுகுறித்து இக் கட்சியின் நடவடிக்கை களைக் கூர்ந்து கண்காணிக்குமாறும், வாராந்தர அறிக்கைகளை அனுப்புமாறும், நடக்கக்கூடுமென ஊகிக்கும் நேர்வுகளை முன்கூட்டியே தெரிவிக்குமாறும், சட்டம், ஒழுங்கு நிலையைக் கண்காணிக்குமாறும் சட்டமும் ஒழுங்கும் சிறப்பாக நிலைநிறுத்தப் படுவதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இக்கிளர்ச்சி நடந்தால் அமைதிக்குலைவு ஏற்படாது காக்குமாறும் தக்க கட்டளைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன. காவல்துறை சூப்ரண்டுகளுக்குத் தக்கக்