பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

அளவுக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் இருக்கிற சிறையில் இடம் போதவில்லை என்ற காரணத்தினால் தனியாக லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் அளவுக்குக் கொட்டகைகள் போடப்பட்டுத் தனித்தனிக் கூட்டமாக அந்தக் கொட்டகைகளில் இருக்கிற அளவு வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்ணீர் வசதி, மற்ற வசதிகள் இல்லை என்று கூறப்பட்ட வுடனேயே சிறைச்சாலை சம்பந்தப்பட்ட தொழில் அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள். திருச்சியில் இட நெருக்கடியாக இருப்ப தனால் அங்கிருந்து மற்ற சிறைச்சாலைகளுக்கும் பரவலாக மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சில பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு 3 மாதம், 6 வாரம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 500 பேர்கள் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை பெற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ஹேபியஸ் கார்ப்பஸ்' மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சியின் முதன்மைத் தலைவர்களைக் கைது செய்ததை எதிர்த்து இவர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு, உயர்நீதிமன்றத்தில் முடிவுறா நிலையில் உள்ளது. அவர்களை எல்லாம் விடுதலை செய்யவேண்டுமென்று டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் கேட்ட நேரத்தில், போராட்டத்தைச் கைவிட்டதாகத் தெரியவில்லை. கைவிட்டதாக அறிவிப்பு வருமேயானால் அவர்களை விடுதலை செய்வது பற்றிக்கூட இந்த அரசு பரிசீலனை செய்யும் என்று கூறி இருக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களைக் கைது செய்து நீண்ட நாள் சிறையிலே வைத்திருக்கவேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக இந்த அரசுக்கு இல்லை. இந்த அரசு நிலம் இல்லாதவர் களுக்கு நிலம் வழங்குவதற்குச் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து லட்சக்கணக்கான பட்டாக்கள் வழங்கி வருகிறது. காட்டு நிலங்களைக்கூட ஆக்கிரமிப்போம் என்று சொன்னார்கள். உண்மையான காடாக இருந்தால் அவற்றை விட்டுவிட்டு, காடு என்கிற பேரால் உள்ள மேடு பள்ளங்களாக இருக்கிற நிலங்களையும் பட்டா செய்து கொடுக்க வேண்டுமென்ற