பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

53

நோக்கத்துடன், சேலம், திருச்சி மாவட்டங்களில், வேறு பல மாவட்டங்களிலும் நிலம் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்ற நிலைமை உருவாகியிருக்கிறது. ஆகவே, நிலம் இல்லாதவர்களுக்குச் சாகுபடிக்கு நிலம் கொடுப்பதற்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் அரசு செய்துகொண்டு வருகிறது.

இந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சி தேவை யில்லை என்று அரசு கருதுகின்றது. அந்தக் கிளர்ச்சியும், அறநிலையில், அமைதியான நிலையில் உருவாகாமல் அந்தக் கிளர்ச்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு வயல் வெளியும் போர்க்களங்களாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்ற காரணத்தினால், பாதயாத்திரை என்று இரண்டிரண்டு பேர்களாகக் கிளம்பி ஆயிரம் இரண்டாயிரம் என்று நிலத்தில் பிரவேசிக்கின்ற நிலையில் புரட்சிகள் ஏற்படும் என்ற காரணத்தினால் 9-ம் தேதியே முன்கூட்டியே அவர்களை காவல் துறையினர் கைது செய்து, இருக்கின்றார்கள். அந்த விஷயத்தில் அரசாங்கம் மிகவும் முன் எச்சரிக்கையாகவே நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிலப்பறிக் கிளர்ச்சியால் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. திரு. சித்தன் அவர்கள் இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது என்று தன்னுடைய தீர்மானத்தில் கூறியிருப்பது முறை ஆகாது என்பதை எடுத்துக் கூறி இந்த ஒத்திவைப்பு தீர்மானம் அவசியம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.