பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

57

நான் பார்த்தேன். ஏதோ எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தில் எங்களை உட்கார வைத்துவிட்டு சில நாட்களுக்குத்தான் இருக்கப் போகிறீர்கள் என்று கூறி வாழ்த்துவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை; ஏனென்றால் பெரியவர்கள் சபித்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அது வாழ்த்தாக மாறி கழகத்தை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுடைய ஜாதகமே எப்படியாவது ஒரு பெரியவர் எங்களை சபிக்கவேண்டும், அப்படி சபிக்கிற நேரத்தில் நாங்கள் வாழ்வது என்பது ஒரு முறையாக இருந்து வருகிறது. அந்தப் பெரியவர் வாழ்த்தினால் இன்னொரு பெரியவர் சபிப்பார். ஒரு பெரியவர் சபித்தால் இன்னொரு பெரியவர் வாழ்த்துவார். ஆகவே வாழ்த்துவதும் சபிப்பதும் மாறி மாறி ஒருவர் சபிக்க இன்னொருவர் வாழ்த்த என்று எங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே இது எங்களது ஜாதகமாகிவிட்டது அந்த ஜாதக அடிப்படையில் நாங்கள் சில நாட்கள் அல்ல பல நாட்கள் இந்த அவையில் திராவிட முன்னேற்றக் கழகம் அமைச்சரவை நடத்தக்கூடிய வாய்ப்பினை தமிழ்நாட்டு மக்கள் தருவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். (ஆரவாரம்.)

ரு

இந்தக் கொடிகள் மூலம் உள்நாட்டில் பெரிய போராட்டங்கள் எல்லாம் ஏற்படும் என்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். எங்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அந்தப் பெரியவரின் கருத்தை நான் நெஞ்சாற மதித்து அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தனித்தனி கொடிகள் வைத்துக் கொண்டால் எப்படி உள்நாட்டுக் குழப்பம் வரும் என்பது தெரியவில்லை. கொடிகள் இல்லாத மாநிலங்களில் உள் மாநிலப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட மாநிலங்கள் இருக்கும்போது நாம் நம் மாநில அளவில் ஒரு தனிக் கொடி அமைத்துக்கொள்ளவேண்டும். தேசியக் கொடியை நாம் புறக்கணிக்கக்கூடாது. நம் தேசியக் கொடியும் அதில் இருக்கவேண்டும் என்ற ஆசையின் அடிப்படையில்தான் நாம் இந்திய அரசுக்கு அதைப்பற்றி எழுதினோம். ஆகவே, அந்த நிலைமை குறித்து இந்த அவையில் ஒரு அறிக்கையை முன் வைப்பதன் மூலம் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு