பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

என் இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர் அன்றைய முதல்வர் திரு. காமராஜர் !

காமராஜருக்கும் எனக்குமிடையே எவ்வளவோ கடுமையான அரசியல் போராட்டம் - ஆனால் அவர் மறைந்த பிறகு சென்னையில் காமராஜர் சாலை சென்னையிலும், விருதுநகரிலும் காமராஜர் நினைவகம் - கன்னியாகுமரியில் சென்னை வரலாற்றுச் சின்னமாக காமராஜர் மணி மண்டபம் விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட சட்டம் - இத்தனையும் அரசியல் பண்பாட்டின் அடையாளமாக நான் உருவாக்கியது அதுபோல அவர் நினைவு போற்ற எத்தனையோ ஏற்பாடுகள்.

மனித நேயத்துடன் அரசியல் நடத்தப்பட்டது அராஜகங்களுக்கிடையிலேயும் அன்பு மலர் பூத்தது.

இப்படி பல வடிவெடுத்த சூழ்நிலைகள் சமுதாய மாற்றங்கள் இவைகள் கடந்த ஐம்பதாண்டுகளில் எப்படியெல்லாம் வானத்தில் அலையும் மேகங்களைப் போல மாறி மாறிக் காட்சியான போதிலும் - மனிதனுக்குரிய மாண்பினை மாற்றிக்கொள்ளாமல்தான் என் அரசியல் பாதை அமைந்தது என்பதை நினைவூட்டி;

அரசியல் மாற்றங்களுக்கேற்ப இந்தத் தொகுப்பு உரைகளில் தலைகாட்டும் கருத்துக்கள், வார்த்தைகள், வாசகங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுமன்னிப்பை அளித்து;

என் நெஞ்சில் எழுந்த எண்ணங்களுக்கு

வழங்கி வலிமை சேர்த்திட வேண்டுகிறேன்.

வாழ்த்து

அன்புள்ள,

22/4/2007

-