பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

CENTENARY LIBR 2. HMNNAI - 600 035.

894.8 T

61

எந்தெந்த அதிகாரம் பெறுவதற்கு இன்றுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதைப்பற்றி எல்லாம் ஆராய்வதற்காக அரசின் சார்பில் 3 மேதைகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட் டிருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை விரைவில் நமக்குத் தரப்படவிருக்கிறது. அந்த அறிக்கை வந்த பிறகு எந்த அடிப்படையில் ஆராய்ந்து அரசாங்கத்தின் சார்பிலே ஒரு தீர்மானத்தை மாநில சுய ஆட்சி பெறவேண்டும் என்கிற தீர்மானத்தை என்னென்ன அதிகாரத்தை நாம் பெறவேண்டு மென்ற அளவிலே தயாரித்து இந்த மன்றத்திலே நாம் தருகின்ற கருத்து, இந்தத் தீர்மானத்துக்கு அவர் வடிவம் கொடுக்க வேண்டுமென்ற அளவிலே இன்றைக்கு இந்தத் தீர்மானத்தை தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கள் வலியுறுத்த வேண்டாம் என்று நான் மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். G1005929.

இந்த மாநில சுய ஆட்சி அல்லது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமென்று கோருவது எல்லாம் பிரிவினை அடிப்படையில் எழுகின்ற கருத்துக்கள் என்று சிலரால் பேசப்படுவது முற்றிலும் உண்மைக்கு மாறானதாகும். திராவிட நாடு கேட்டீர்கள், திராவிட பிரிவினையை விட்டுவிட்டீர்கள். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று கூறுகிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூட தெலுங்கில் "தானிக்கிப் பேரு ஏமி. . ." என்றார். ஆனால் காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்று கூறுவது; பிரிவினையை விட்டது நியாயம் இல்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மாத்திரம் அல்ல, இந்தக் குற்றச்சாட்டை சாட்டுகிற எல்லோரும் உணர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன். பிரிவினைக் கேட்கப்பட்டது உண்மை. ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் “அந்தப் பிரிவினை கொள்கையை விட்டு விட்டோம். ஆனால் அதற்குரிய காரணங்களுக்காக நாம் போராடுவோம்” என்று கூறியது எந்த விதத்தில் தவறு உடையது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பிரிவினைக்குக் காரணங்கள் நம்முடைய நாடு புறக்கணிக்கப்படுகிறது. தெற்குப் பக்கத்திலுள்ள நாடுகளில் எல்லாம் தொழில் வளம் இல்லை. தொழில் வளம் பெருக வேண்டுமென்பதற்கு யாரும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.