64
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
எந்த எந்த தகுதியுடையவர்களுக்கு எப்படி, எத்தனை நாட்களுக்கு இறக்கியிருக்கவேண்டுமென்றெல்லாம்
விதிமுறைகளைச் சொன்னார்கள்.
மாநில அளவிலே கொடி அமைக்கப்பட்டால், தேசியக் கொடிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன, அதைப்போன்று அதற்கும் என்ன என்ன விதிமுறைகள் என்று மேலவையிலே கேட்கப்பட்ட நேரத்திலே அந்த விதிமுறைகளை நீங்களே வகுத்துக்கொள்வீர்களா அல்லது அவையிலே உறுப்பினர் களிடையே கலந்துகொண்டு விதிமுறைகள் வகுக்கப்படுமா? என்று கேட்ட நேரத்திலே, அவையைக் கலந்து கொண்டுதான் செயல்படுத்தப்படும் என்று சொன்னேன். இப்பொழுது கேட்கப் பட்டிருக்கின்ற கொடி மாநில அமைச்சர்கள் வீடுகளிலும் கார்களிலும் பறக்கவிடப்படுவதற்காகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற கொடி என்ற வகையிலேதான் தவிர, தேசிய ஒருமைப்பாட்டைக் குலைப்பதாக இருக்காது.
தேசியக் கொடியைப் பறக்க விடுவதற்கு நாங்கள் கூச்சப் படுகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரத்திலே இப்படிப்பட்ட தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. தேசிய கீதத்தை அவமதித்தோம், தேசிய கீதம் பாடப்படும்பொழுது வெளியேறுகிறோம் என்றெல்லாம்கூடச் சொல்லப்பட்டது. ஆனால் மக்கள் நேரடியாகக் கண்டார்கள். உண்மைதானா என்று. நாங்கள் கலந்துகொள்கின்ற எந்த விழாவிலும் தேசிய கீதம் பாடப்படுகின்ற பொழுது எப்படி நடந்துகொண்டோம் என்பதை மக்கள் கண்டார்கள், உணர்ந்து கொண்டார்கள். தேசியக் கொடியை அவமதிக்கிறோம் என்று சொன்னார்கள். உள்ளபடியே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அப்படிக் கூறியிருக்கக்கூடாது. தேசிய கொடியைப் போட்டுக்கொண்டு போவதால் அதைக் காங்கிரஸ் கொடி என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால் அவமானமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள் என்று சொன்னார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற அவர்களுக்கு, இந்த மந்திரி சபைக்கு இந்த ஆட்சிக்கு தேசியக் கொடியிடம் எவ்வளவு மரியாதையும் மதிப்பும் இருக்கிறதோ அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் உண்டு.