பதிப்புரை
காலத்தை வென்று, ஞாலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய வலிவும், பொலிவும் பெற்றவை கலைஞர் அவர்களின் நூல்கள். அவரது நூல்கள் பலவற்றைப் பதிப்பிக்கும் பொறுப்பும் சிறப்பும் தமிழ்க்கனி பதிப்பகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது கலைஞர் அவர்களுக்கு முழுமையாக நிறைவு தரும் வண்ணம் பதிப்பித்துத் தருவதென்பது மிகவும் கடினமான காரியம். எனினும், ஒவ்வொரு முறையும் திறன் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, உழைத்து உருவாக்கிப் பதிப்பித்ததால்தான் மீண்டும் மீண்டும் அந்தப் பெருமை தமிழ்க்கனிப் பதிப்பகத் தார்க்கு கிடைத்து வருகிறது.
கலைஞர் அவர்களின் :
பொன்னர் சங்கர்
தொல்காப்பியப் பூங்கா
தாய் காவியம்
முத்துக்குளியல்
சிந்தனையும் செயலும்
காலப்பேழையும் கவிதைச் சாவியும்
போன்ற கற்கண்டுச் சொல்லோவியங்களைப் பதிப்பித்திடும் நல்ல வாய்ப்புக்களைப் பெற்று நாமணக்க நன்றி செலுத்தி நாளெல்லாம்