பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

பிரதிஷ்டிக்க அனுமதி தந்ததாக அந்தப் பிரமுகர் தெரிவித்ததை மறுத்துள்ளார்.

அப்போதே ஐயப்பசாமியை உருவாக்கி கும்பாபிஷேகம் நடத்துவதற்காகப் பணம் வசூலிக்கும் காரியத்தில் இறங்கியவர் ன்றைக்குத் திடீர் பிள்ளையார் விஷயத்திலும் தலைமையேற்று இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

'நாங்கள் நாத்திகர்கள், ஆகவே, அங்கே பிள்ளையார் இருக்க வேண்டாம், கோயில் இருக்க வேண்டாம்' என்று முடிவு கட்டியதாக திரு. வினாயகம் அவர்கள் குறிப்பிட்டார்கள். அது உண்மையாக இருக்குமானால் நாட்டிலே இருக்கும் எவ்வளவோ பிள்ளையார் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு, அகற்றப்பட்டு இருக்க வேண்டும். எந்தக் கடவுளும் இருக்க வேண்டாமென்று நாங்கள் கூறவில்லை. இந்தப் பிள்ளையார் வந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். பிரச்சினைக்குரிய இடத்தில் இந்த நிலை ஏற்படுகின்றபோது அரசு அதிலே அக்கறை செலுத்தவேண்டி யிருக்கிறது.

அந்த வட்டாரத்தில் ஒரு இடத்தில் மசூதி கட்டுவது அல்லது பள்ளிவாசல் கட்டுவதிலே ஒரு பிரச்சினை. இந்துக் களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படும் விதத்தில் மாச்சரியங்கள் உருவாயின. உடனே, நாங்கள மாவட்டள் ஆட்சித் தலைவரை அழைத்து 'நீங்கள் முன்நின்று பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள்' என்று கேட்டுக்கொண்டோம். மாவட்ட ஆட்சித் தலைவர் இரு தரப்பாருடனும் கலந்து பேசி எடுத்த முடிவிற்கு இசைவாக இந்துப் பெரியவர்களிடமிருந்தும், முஸ்லீம் பெரியவர்களிடமிருந்தும் கைப்பட்டிக் கடிதம் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே பள்ளிவாசல் கட்டுவதற்காகக் குறிப்பிட்டிருந்த இடத்தை விட்டுவிட்டு போலீஸ் லைன் இருக்கும் இடத்தில் பள்ளிவாசல் கட்ட ஒப்புதல் அளித்துவிட்டார்கள். போலீஸ் லைனில் எந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்காகத் திட்டமிடப்பட்டதோ அந்த இடத்தில் இந்தப் பிள்ளையார் திடீரென்று வந்தார். அப்படிப் பிள்ளையார் வந்ததற்குக்