கலைஞரின் சட்டமன்ற உரைகள்
73
பத்திரிகையில்கூட வந்திருக்கிறது. செல்வராஜ்தான் இந்தப் பிள்ளையாரைக் கொடுத்தார் என்றுகூட வந்திருப்பதாகக் கவனம்.
பிள்ளையாருக்கும் இந்த கான்ஸ்டபிளுக்கும் நீண்ட நாட்களாகவே தொடர்பு இருந்து வந்திருக்கிறது என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. இன்றைக்குக் கொடுத்திருக்கும் அறிக்கையின்படி கமிஷனருக்கு எழுதிக் கொடுத்திருப்பதில் கூட என்ன சொல்லியிருக்கிறார்?
திரு. கே. வினாயகம் : இதுவரையில் அந்த போலீஸ் காரர் கொடுத்த ஸ்டேட்மெண்ட் அனைத்தும், குமுதத்திற்குப் பேட்டியளித்தபோது குறிப்பிட்டதும்கூட “அண்டர் ட்யூரஸ்" அப்படிக்கொடுத்தார். இப்போதுதான் உண்மையாக மனத்தில் இருக்கும் குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள ஸ்டேட்மெண்ட் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. முன்பு கொடுத்த ஸ்டேட் மெண்ட்டை இன்றைக்குச் சொல்லுவது வழக்கு மன்றத்தில் எங்களைப் போன்றவர்கள் சொல்ல வேண்டியதாகும். இப்போது அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலமைச்சர் அவர்கள் கவனிக்க வேண்டும்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதே ஆள் நாளையதினம் நேற்று கொடுத்தது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று சொல்லக்கூடும். தன்னைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வற்புறுத்தப்பட்டு ஒரு வாக்குமூலம் கொடுக்க ஆளாக்கப் பட்டேன் என்று சொன்னால், அதைப்பற்றி விசாரிக்க வேண்டியது தான். டிப்பார்ட்மெண்டார் அதைப்பற்றி விசாரிப்பார்கள். விஸ்வனாத ஐயர் என்ற இன்ஸ்பெக்டர் தன்னை இப்படியெல்லாம் சொல்லச் சொன்னார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவரும் விசாரிக்கப்படவேண்டியவராக இருக்கலாம். பிள்ளையாருக்கும் இவருக்கும் அதிகத் தொடர்பு இருப்பதினால் அவர், தலைமீது வைத்திருக்கக்கூடும். ஆனால், பிள்ளையார் வந்தது ஏமாற்று வேலை என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதில் யார் குற்றவாளி என்பதில் வினாயகம் அவர்கள் இந்த ஹெட் கான்ஸ்டபிளுக்காக வாதாடினால் வாதாடட்டும். ஆனால், திடீர்ப் பிள்ளையாருக்காக வாதாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ஹெட் கான்ஸ்டபிள் என்ன சொல்லி