பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

கல் பிள்ளையார்தான் வரவேண்டுமா? உண்மைப் பிள்ளையாரே வந்திருக்கக்கூடாதா? இதுபற்றிய நீதி விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்கள். விசாரணை வைப்பதற்குத் தயார், பிள்ளையாரே வந்து சாட்சி சொல்வதாகயிருந்தால், மறுமலர்ச்சி யுகத்தில் பல்வேறு நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அப்பலோவை அனுப்புவதில் ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'பார் பார் பிள்ளையார் பார்' என்று 'பட்டணம் பார், பட்டணம் பார்', என்பதைப்போல் சொல்வது சில அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நல்ல காரியமாக இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் ஆண்டவன் விவகாரத்தில் யார் யாருக்கு நம்பிக்கையிருக்கிறதோ அவர்கள் மனதை புண்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. ஆனால் ஆண்டவன் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு யார் யார் பித்தலாட்டங்களை செய்ய எண்ணுகிறார்களோ அதை நிச்சயம் அனுமதிக்காது இந்த அரசாங்கம் என்று கூறி, இது குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு அமைகிறேன்.