7
மகிழ்ந்திருக்கிறோம். அந்த வரிசையில் மற்றுமொரு வாய்ப்பு
தற்போது கிட்டியிருக்கிறது
"சட்டப்பேரவையில்
கலைஞர்’ பொன்விழா
கொண்டாடப்படும் இந்தக் குதூகலமான வேளையில், கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் கலைஞர் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறுபட்ட பொருள் களில் ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்துப் பதிப்பிக்கும் பேறு தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்கு வாய்த்திருக்கிறது.
ஆளுநர் உரைமீது உரைகள்
தொழில்துறை பற்றி உரைகள்
காவல்துறை பற்றி உரைகள்
நிதிநிலை அறிக்கையின் மீது உரைகள்
காவிரி பிரச்சினை மீது உரைகள்
ஒத்திவைப்பு, கவனஈர்ப்பு தீர்மானங்களின் மீது உரைகள்
தகவல்கள், அறிக்கைகள், விளக்கங்கள்மீது உரைகள்
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது உரைகள் மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது உரைகள்
என சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய உரைகள் பகுக்கப்பட்டு பதிக்கப்பட்டு வெளிவருகின்றன.
"கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க் கேளாரும் வேட்பமொழியும்" சொல்லேருழவர் கலைஞர். திறனறிந்து