பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

79

ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும்கூட, நாம் அதைப் பொருட்படுத்துவதற்கில்லை.

இந்த நாட்டில் பல ஆண்டுக் காலமாக முடக்கப் பட்டிருந்த ஜாதிப்பிரச்சினை இந்தத் தேர்தலிலே தலைதூக்குவ தற்கான சூழ்நிலையை யார் ஏற்படுத்தினார்கள்? அந்தக் குற்றத்திற்கு யார் பொறுப்பாளி? "பிராமணர்களாகிய நீங்கள் துணிவானவர்கள், பலவான்கள்" என்றெல்லாம் பேசப்பட்டது. நேற்று குளித்தலையில் நடந்த ஊர்வலத்தின் போது, அக்ரகாரத்திலிருந்து கற்கள் வீசப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் கவலையை அளிக்கக்கூடியது. தமிழ்நாட்டிலே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த வகுப்புக் கலவரங்கள் அற்ற தன்மை, ஜாதிக் கலவரங்கள் அற்ற தன்மை ஆகியவற்றை என்றென்றும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்க எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எல்லா கட்சித் தலைவர்களும் பொறுப்புடன் இதிலே ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இதை எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன். ஆகவே, டாக்டர் ஹாண்டே அவர்கள் தந்த தீர்மானத்தை விவாதிக்க இந்த அவையை ஒத்திவைக்க வேண்டியதில்லை என்று கூறி முடிக்கிறேன்

6

டாக்டர் எச்.வி.ஹாண்டே: தலைவர் அவர்களே, உங்கள் பக்கத்திலே அப்படி இல்லை. இரண்டு மூன்று பேர்கள்தாம் அவதிப்பட்டிருக்கிறார்கள். எங்கள் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள். 31-வது டிவிஷனைச் சேர்ந்தவர்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் ஹாண்டே

அவர்கள்.

DR. H.V.HANDE: I am trying to give maximum co- operation. Again the Hon. Chief Minister is trying to bring in communities. we will try to avoid communities. Let us have an understanding.