பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

மின்சார உற்பத்திக்குப் பதிலாக பாண்டியாறு- புன்னம் புழா தண்ணீரை நாம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப் போவதாக கேரள முதல்வர் கூறுவது சரியானதல்ல.

மின்சார உற்பத்திக்குத் தேவையானது போக விவசாயத் திற்குத் தண்ணீரை பயன்படுத்தலாமா என்பதுதான் தமிழக அரசின் எண்ணமாகும். அதனை ஒருதலைப்பட்சமாக நிறை வேற்றும் முயற்சி ஏதும் தமிழக அரசுக்குக் கிடையாது. கேரள அரசிற்கும், நமக்கும் சுமுகமான உறவே இருந்து வருகிறது. அந்த உறவின் அடிப்படையில் இரண்டு அரசுகளும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதில் எந்தவிதமான சங்கடமும் இருக்காது என்று நான் நம்புகிறேன். பத்திரிகைகளிலே கேரள முதலமைச்சர் அவர்கள் கேரள சட்ட மன்றத்தில் பேசி இருப்ப தாக வந்திருக்கிறது. அந்தச் செய்தியின் அடிப்படையில்தான் நேற்றைய தினம் அவருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது அந்த அடிப்படையில்தான் மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்களும், மாண்புமிகு சுப்ரமண்யம் அவர்களும் இங்கே ஒத்திவைப்புத் தீர்மானத்தை அளித்திருக்கிறார்கள். நானும் அந்த அடிப்படையில் இங்கே எனது பதிலைத் தந்திருக்கிறேன். அவர் என்னென்ன பேசினார் என்பதெல்லாம் அதிகாரப் பூர்வமாக நமக்குக் கிடைத்த பிறகுதான் அதைப்பற்றி முடிவாக நிர்ணயிக்க வேண்டும். என்ன இருந்தாலும் மாநில அரசுகளுக்கு இடையே உறவு நிலையிலே இதைப் போன்ற விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளப்படவேண்டியிருக்கிறது. இப்படிப் பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலே நாம் ஆழ்ந்த அக்கறை உள்ளவர்கள் என்பதை இந்த மன்றத்திலே உள்ள அனைவரும் நன்கு அறிவார்கள்.

நமது மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், மற்ற மாநிலங்களோடு, பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதிலே எந்த விதமான தவறும் இல்லை என்பதை நான் பொன்னப்ப நாடா ரிடத்திலே மிகுந்த பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஏதோ நடக்கிற அரசு கழக அரசு என்ற காரணத்திற்காக மற்ற மாநில அமைச்சர்கள் நம்மைப் பற்றிச் சொல்லும் செய்திகளை யெல்லாம் தலைப்புக் கொடுத்து வெளியிடுகிற நேரத்திலே