பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

சேது சமுத்திரத் திட்டம், தூத்துக்குடி துறைமுகம்

உரை : 15

நாள் : 26.07.1971

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவரவர்களே, இந்த ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் குறித்து மாண்புமிகு உறுப்பினர்களுடைய ஐயத்தைப் போக்கும் வகையில் நான் தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் ஆகிய இந்த இரண்டு திட்டங்களைப்பற்றி தற்போதுள்ள நிலைமைகளைச் சற்று விரிவாக விளக்க விரும்புகிறேன்.

5

தற்போது தூத்துக்குடியில் உள்ள துறைமுகம், இந்தியாவிலேயே மிகப்பெரிதான நடுத்தரத் துறைமுகமாகும். இதனை ஒரு ஆழ்கடல் துறைமுகமாக அபிவிருத்தி செய்யும்பொருட்டு 1970-ல் “நடுத்தரத் துறைமுக அபிவிருத்திக் குழு" பரிந்துரைத்தது. ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கு இந்திய அரசு 24.4 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் மத்திய அரசுத் திட்டமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் 258- பிரிவின் கீழ் இந்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. முயல் தீவிற்கு அண்மையில் செயற்கைத் துறைமுகம் ஒன்று அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கடலில் 2,745, 1,275 மீட்டர் பரப்புள்ள இடத்தில் கப்பல்துறை அமைத்தும், கப்பல் போகவும் வரவும் 122 மீட்டர் அகலம் உள்ள வழி அமைத்தும், 1,275 மீட்டர் இடைவெளியிட்டு சுமார் 3,900 மீட்டர் நீளமுள்ள 2 அலைத் தடுப்புச்சுவர்கள் (வடக்கு-தெற்கு) கட்டியும் மேற்படிச் செயற்கைத் துறைமுகம் அமைக்கப்படும். இத்துறைமுகத்தில் கீழ்க்காணும் ஐந்து துறைகளுக்கு இடவசதியளிக்கப்படும் :-

நிலக்கரித் துறை உப்புத் துறை

..... 1

....... 1