பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

இராமனாதபுரம் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை

உரை : 16

நாள்: 8.12.1971

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவரவர்களே, இராமநாதபுரம் மாவட்டத்திலே நம்முடைய நண்பர் திரு.சுப்பு, எம்.எல்.ஏ. அவர்கள் இருக்கின்ற பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று ஒரு தீர்மானத்தை மாண்புமிகு உறுப்பினர் திரு.சுப்பு அவர்கள் வைத்து, அதன் தொடர்பாக சில விஷயங் களைப் பேசியிருக்கிறார்கள். அநேகமாக இப்போது பேசிய அதே பாணியில்தான் திரு. சுப்பு அவர்கள் மேடையிலும் பேசுகிறார்கள். அவர்கள் ஏதோ அமைச்சர்கள் இப்படிப் பேசுகிறார்கள், கட்சித் தலைவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி தோழமைக் கட்சியாக இருந்தாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத் தோழமையி லிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்துவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுமானால், அந்த நல்ல காரியத்தை நண்பர் திரு.சுப்பு போன்றவர்கள் செய்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும். அந்த அளவுக்கு நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் திரு.சுப்பு அவர்கள் மேடைகளிலும் பேசுகிறார் என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடைய பேச்சுக் குறிப்புகள் அவ்வப் போது தொகுத்து வரப்பெற்று, அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கிருக்கிறது என்பதை இந்த அவையும் அறியும்; நாமும் அறிவோம்.

திரு.சுப்பு அவர்கள் யாரோ ஒருவர் அவரைப்பற்றிப் பேசியதாக, குறிப்பாகச் சொன்னார்கள். அவர்கள் அமைச்சர் களைப் பற்றியும், தி.மு.க.கழக மாவட்டச் செயலாளர்களைப்