90
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. இதில் தி.மு.க.-வை விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டார்கள் என்று சொல்வது எவ்வளவு தவறானது என்பதற்கு நான் தெரிவித்த புள்ளி விவரங்களே போதுமான சான்றாகும் என்று கருதுகிறேன். அவர்கள் சொன்னதைப்போல அந்தக் காலத்து முதுகுளத்தூர் எதுவும் அந்தப் பகுதியில் நடந்துவிடவில்லை. ஏதோ ஆங்காங்கு திரு. சுப்பு அவர்களின் பேச்சின் தொடர்பாக சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிறுசிறு கலவரங்கள் ஏற்பட்டன என்றாலும் காவல்துறையினர் அவ்வப்போது கண்காணிப்புடன் இருந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கட்சி வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இதைப்பற்றி விவாதிக்க அவையை ஒத்திவைக்கத் தேவையில்லை என்று நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
அ