பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

91

பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

உரை : 17

நாள்: 17.3.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர் களே, இந்த ஒத்திவைப்புப் பிரச்சினையைக் கொண்டுவந்த கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் இது தீராத பிரச்சினை என்று குறிப்பிட்டார்கள். இது தீராத பிரச்சினை அல்ல; ஏற்கனவே தீர்த்து வைக்கப்பட்ட பிரச்சினையை வைத்துக்கொண்டுதான் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்திலே ஈடுபட்டார்கள் என்பதை நாடு நன்றாக அறியும். இந்த அவையிலும், மேலவையிலும் நானும் மாண்பு மிகு கல்வியமைச்சர் நாவலர் அவர்களும் இந்தப் பிரச்சினை குறித்து, அரசு எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொண்டது என்பதையும் எத்தனை முறை ஆசிரியர்களுடைய பிரதிநிதி களோடு நாங்கள் பேசியிருக்கிறோம் என்பதையும் இறுதியாக அவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்புகூட, மேலவையிலும், பேரவையிலும் ம் அவர்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன என்பதை எடுத்துக் காட்டியும் அதிலே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்குவதற்காக மீண்டும் அழைத்து அந்தச் சந்தேகத்திற்கான விளக்கங்கள் எல்லாம் அளிக்கப்பட்டன என்பதையும் வெகு விரிவாக நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.

அதற்குப் பிறகும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டார்கள். அவர்கள் போராட்டத்தை நிறுத்துவதாகச் சொல்ல வில்லை. முதல் அமைச்சர் அவர்கள் அப்படிச் சொல்வது தவறு என்றெல்லாம் கூறினார்கள். போராட்டத்தை நிறுத்துவதாகச் சொல்லித்தான் சென்றார்கள் என்று மேலவை உறுப்பினர் திரு. ராஜா ஐயர் அவர்கள் அங்கு எழுந்து சாட்சியம்கூட அளித்