பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

தார்கள். இவ்வளவுக்கும் பிறகும் போராட்டம் நடைபெற்றிருக் கிறது. திரு. தங்கமணி அவர்கள் சொன்னதைப்போல் இதில் அரசு ஏதோ விடாப்பிடியாக இருக்கவேண்டும் அல்லது கௌரவப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும் என்பதல்ல. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகும் இது போன்ற ஒரு கிளர்ச்சியில் ஈடுபடுவது ஆட்சிப் பொறுப்பில் எந்தக் கட்சி இருந்தாலும் எதிர்காலத்தில் வளரவேண்டிய சமு தாயத்திற்கு அது உகந்ததாக இருக்காது என்ற உணர்வைத்தான் நான் பலமுறை இந்த மாமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனால் பொறுப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் கலந்து பேசி ஒரு முடிவு காணவேண்டும் என்று தங்கமணி அவர்கள் கூறினார்கள்.

இன்று காலையில்கூட பொறுப்பு மிக்க தலைவர்கள் சிலர் என்னை என் இல்லத்தில் சந்தித்தார்கள். காலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின், இன்று அந்தப் போராட் டத்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கிற திரு. மயில்சாமி அவர்களும், சிங்காரவேலு அவர்களும் கையெழுத்திட்டு என்னிடத்தில் காலையில் ஒரு அறிக்கை தந்திருக்கிறார்கள். அந்த அறிக்கையின்படி போராட்டத்தை அவர்கள் நிறுத்தி விட்டதாகக் கூறியிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன் (ஆரவாரம்.) அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, "5-3-1973-ல் இருந்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் நடத்திவரும் நேரிடை நடவடிக்கை தொடர்பாக 16-3-1973 வெள்ளியன்று கூடிய நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை அரசிற்குச் சமர்ப்பிக்கின்றது" என்று தொடங்கி, “1-4-1970-க்குப் பிறகு பணியில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரிர்களின் பணிவரை முறைப்படுத்தப்படுவது பற்றிய தமிழக அரசின் ஆணைக்கும், 10 ஆண்டுகள் பணி புரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நிலை பெற தகுதி உடையோர் ஆவர் என்ற அரசின் அறிவிப்பிற்கும், தமிழக அரசின் விளக்கங்கள் திருப்தியளிப்பதாக இருப்பதாலும்,