பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

வந்திருப்பதற்காக அவர்களது கடமையுணர்ச்சியையும் நான் வரவேற்கிறேன். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற ஆசிரியர்களும் கடமை உணர்வோடு பணியாற்ற முன் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். போராட்டத்தை அவர்கள் நிபந்தனையின்றி எல்லாக் கட்டத்திலும் வாபஸ் பெற்றுக்கொண்ட காரணத்தினால் சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (ஆரவாரம்). இதற்கு மேல், அவையை ஒத்திவைத்துப் பேச எதுவும் இல்லை என்பதை தலைவர் அவர்களே, தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. கே.டி.கே. தங்கமணி: முதலமைச்சர் அவர்கள் சொன்னதில் மகிழ்ச்சியடைபவர்களில் நானும் ஒருவன். சாதாரணமாக ஒரு போராட்டம் முடிகிறபோது ஒரு க்ளாஸ் எப்போதும் சேர்ப்பது உண்டு என்று சொல்லி. “No action of any sort will be taken against anybody for taking part in the struggle in any form"

அதாவது எந்தவிதமான ‘விக்டிமைசேஷனும்' இருக்கக் கூடாது. அவர்களுடைய சர்வீஸ் பாதிக்கக்கூடிய முறையில் மற்றவைகள் இருக்கக்கூடாது. இன்று சிலர் கடமையுணர்ச்சி யோடு வந்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். நாங்கள் அம்மாதிரியாக-போராட்டம் நடக்கிறபோது அவர்கள் வந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களைக் கடமையுணர்ச்சி உள்ளவர்கள் என்று நாங்கள் எல்லாம் கருதுவதில்லை. அப்படி முதல் அமைச்சர் அவர்கள் கருதுவதாக இருக்கலாம். அவர்களை எல்லாம் நாங்கள் வேறு முறையில்தான் கருதுவது வழக்கம். அவர்கள் பேரில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படக் கூடாது, எடுக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இது அரசாங் கமும் ஆசிரியர்களும் உட்கார்ந்து செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல. அப்படி ஒப்பந்தமாக இருந்தால் இரண்டு பேர்களும் கூடக் கையெழுத்துப் போட்டு இன்னின்ன நடவடிக்கைகள்