பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

95

எடுக்கப்பட மாட்டாது, ஆகவே வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு விடுங்கள் என்று சொல்லாம். அவர்களாகவே நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம் என்று அவர்களாகவே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே தாங்களாக போராட் டத்தை கைவிட்டுவிட்டதாக எழுதிக்கொடுத்திருப்பதால் அரசே யாரையும் கேட்காமல் அவர்களையெல்லாம் இன்று மாலை விடுதலை செய்துவிடலாம் என்றிருக்கிறது.

அவர்களின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார்கள். இந்த அரசு யாரையும் பழி வாங்கிப் பழக்கப் பட்டதல்ல. சேலத்தில் நடைபெற்ற கைத்தறியாளர்கள் மறியல் போராட்டத்தில்கூட விடுதலையானவர்கள் போக மறியலில் ஈடுபட்டுத் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையிலே இருந்தார்கள். திரு. பொன்னப்ப நாடார் அவர்களும், டாக்டர் ஹாண்டே அவர்களும், திரு. ஏ.ஆர். மாரிமுத்து அவர்களும் என்னிடம் அதைப்பற்றிச் சொன்னார்கள். அவர்களை எல்லாம் விடுதலை செய்து விடலாம் என்று. 300, 400 பேர்கள் இருப்பார்கள். அவர் களையெல்லாம் விடுதலை செய்யச் சொல்லி நேற்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே யாரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

கடமையுணர்ச்சியோடு வந்தவர்களுக்கு அவர்கள் வைக்கும் பெயர் வேறு என்று சொன்னார்கள். அவர்கள் அவர்க ளுடைய அகில உலகக் கண்ணோட்டத்தில் அந்தப் பெயர்களை எல்லாம் வைப்பார்கள். ஆனால் நாங்கள் தமிழ்நாட்டு பண்பாட்டுக் கண்ணோட்டத்தோடு அவர்கள் கடமையுணர்ச்சி யோடு பணியாற்றினார்கள் என்றுதான் நாங்கள் அதற்குப் பெயர் வைக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம். யாரையும் அரசு பழி வாங்க முயலவில்லை. அப்படிப் பழி வாங்கும் எண்ணம் இந்த அரசுக்குக் கிடையாது.

ஆசிரியர்கள் பிரதிநிதிகளோடு, மேலவை உறுப்பினர்கள் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும்கூட அவற்றைப்பற்றிக் கூறியிருக் கிறார்கள். அவர்கள் விடுதலை பெற்ற பிறகு அந்த ஆசிரியர்