பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

97

அரிசி உற்பத்தி பற்றிய பிரச்சினை

உரை : 18

நாள்: 4.8.1973

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர்களும் கொடுத்துள்ள இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது உணவு அமைச்சர் அவர்கள் பல விளக்கங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். முதலிலே கன்னியாகுமரி மாவட்டத்திலே ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய ஒன்றரை லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அனைவருமே அரிசியை உண்பவர்கள் என்று கணக்கு எடுத்துக் கொண்டாலும். தேவை ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய ஒரு லட்சத்துப் பதினைந்தாயிரம் டன்களுக்கு மேற்படாது என்ற விவரம் நம்மிடத்திலே இருக்கின்றது. தேவை ஒரு இலட்சத்துப் பதினைந்தாயிரம் டன்களுக்கு மேற்படாது என்ற நிலையிலே ஒன்றறை இலட்சம் டன்கள் ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையிலே இன்றைக்குக் கன்னியாகுமரி மாவட்டத்திலே எழுந்துள்ள பிரச்சினையை அணுகுவது சரியானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இன்றைக்கு அங்கே அரிசி குறித்து, விலையேறி விட்டது என்றும், கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டு, சில அரசியல் கட்சிகள் அங்கே போராட்டங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள். நம்முடைய மாண்புமிகு பழைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பழிவாங்கப்படுகிறது என்ற பழிச்சொல்லை இந்த அரசின் மீது தொடர்ந்து சுமத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி